இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
பேட்டிங் பயிற்சி மேற்கொண்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் வரும் ஜூலை 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்து அணியிடம் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்ததால் பலமான கம்பேக் கொடுக்கும் வகையில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் பந்துவீச்சு பயிற்சி மட்டுமின்றி பேட்டிங் பயிற்சியையும் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தாலும் பின் வரிசையில் விளையாடும் வீரர்கள் பெரியளவில் ரன்களை குவிக்க முடியாமல் எளிதாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அப்படி பின்வரிசை வீரர்களிடம் இருந்து குறைந்த பட்ச பேட்டிங் பங்களிப்பு கூட கிடைக்காதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பந்துவீச்சார்களும் பேட்டிங்கில் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற இருப்பதினால் அதனை சமாளிக்கும் வகையில் தற்போது சிராஜ் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அவரால் களத்தில் நின்று 30 முதல் 50 பந்துகள் வரை சந்திக்க நேர்ந்தால் எதிர்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிக்க வாய்ப்புள்ளது. அதற்காகவே முஹமது சிராஜ் இந்த பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : அடுத்த 2 ஆவது போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதில் அந்த 2 பேரில் ஒருவருக்கு சேன்ஸ் தரலாம் – அதுதான் கரெக்ட்
அதுமட்டுமின்றி இந்திய அணி அடுத்த போட்டியில் நிச்சயம் ஒரு கூடுதல் பேட்ஸ்மேனுடன் விளையாட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில் ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலா நிதீஷ் ரெட்டி அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவர் இடம் பெறலாம் என்றும் தெரிகிறது. அப்படி அவர்கள் இருவரில் ஒருவர் விளையாடினால் கூட இந்திய அணியின் பின்வரிசை பேட்டிங் பலப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



