ஹார்டிக் பாண்டியா மட்டும் இல்லனா வெறுங்கையோடு தான் வீட்டுக்கு வந்திருப்போம் – மனம்திறந்த ரோஹித்

Rohit and Pandya
- Advertisement -

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியானது டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலக கோப்பையை இந்திய அணி தோனியின் தலைமையில் கைப்பற்றி அசத்தியது.

பாண்டியா இல்லைனா வெறுங்கையோடு தான் நின்றிருப்போம் : ரோஹித் சர்மா

அதற்கு அடுத்து இரண்டாவது முறையாக நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்களை மகிழ்வித்தது. அதிலும் குறிப்பாக மாபெரும் அந்த இறுதிப் போட்டியில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் தென்னாப்பிரிக்கா அணியை தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றதெல்லாம் நிச்சயம் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி குறித்தும் ஹார்திக் பாண்டியாவின் நம்பிக்கை குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மனம்திறந்த கருத்து ஒன்றினை அளித்துள்ளார். அதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை வென்ற தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.

ஹார்டிக் பாண்டியா என்னுடைய மேன். எனக்காகவும், இந்திய அணிக்காகவும் அவர் அந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவர் இல்லையெனில் அந்த போட்டியில் தோல்வியை சந்தித்து வெறும் கையோடு தான் நின்று இருப்போம் என்று ரோகித் சர்மா கூறினார். இப்படி அவர் கூற காரணம் யாதெனில் :

- Advertisement -

ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கிளாசனின் விக்கெட்டை வீழ்த்தி ஹார்டிக் பாண்டியா தான் இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அதுமட்டும் இன்றி பும்ரா ஒருபுறம் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி கூடுதல் அழுத்தத்தை கொடுக்க கடைசி ஓவரில் பாண்டியா டேவிட் மில்லரையும் ஆட்டமிழக்க வைத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க : 80.60% இதுக்கு இந்தியா எவ்வளவோ பரவால்ல.. நியூஸிலாந்தை விட ஃபீல்டிங்கில் மாஸ் காட்டும் விவரம்

இப்படி கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை பாண்டியா வீழ்த்திய விதம் அவரை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக மாற்றியது. அதுமட்டும் இன்றி சூரியகுமார் பவுண்டரி லைனில் பிடித்த அந்த கேட்ச் தான் இந்திய அணிக்கு கோப்பையையும் பெற்றுக் கொடுத்தது என ரசிகர்கள் சூரியகுமார் யாதவையும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement