விராட் கோலி மாதிரி இல்லாம.. கேஎல் ராகுல் நாட்டுக்காக இதை செஞ்சது பாராட்டுக்குரியது.. பதானி பாராட்டு

Hemang Badani
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இருப்பினும் அப்போட்டியில் கேஎல் ராகுல் 42, 137 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்குப் போராடினார். விராட், ரோஹித் இல்லாத சூழ்நிலையில் அவர் தம்முடைய அனுபவத்தைப் பயன்படுத்தி பொறுப்புடன் செயல்பட்டது பாராட்டுகளைப் பெற்றது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய ராகுல் தம்முடைய முதல் குழந்தை பிறப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடாத அவர் உடனடியாக திரும்பி டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடினார். அத்துடன் டெல்லி லீக் சுற்றுடன் வெளியேறியதும் உடனடியாக தம்மை இங்கிலாந்துக்கு அனுப்புமாறு ராகுல் பிசிசிஐயை கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

நாட்டுக்காக ராகுல்:

அங்கே சென்ற ராகுல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2வது போட்டியில் சதத்தை அடித்து அசத்தினார். இந்நிலையில் தமக்கு முதல் முறையாக குழந்தை பிறந்த போதும் ராகுல் நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து ஓய்வெடுக்காமல் விளையாடுவதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமந்த் பதானி பாராட்டியுள்ளார். 2020/21 ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.

அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி தம்முடைய முதல் குழந்தை பிறப்புக்காக நாடு திரும்பினார். 2024 மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அப்போது 2வது குழந்தை பிறப்புக்காக விலகிய விராட் கோலி 5 போட்டிகளையும் மொத்தமாக புறக்கணித்து ஓய்வெடுத்தார்.

- Advertisement -

பதானி பாராட்டு:

அது போல செய்யாத ராகுல் பற்றி பதானி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு முன்கூட்டியே சென்று பயிற்சிப் போட்டியில் விளையாடுகிறேன் என்று ஒருவர் சொல்வதை நான் விரும்புகிறேன். இங்கிலாந்தில் அடித்த சதத்தை விடுங்கள். அது இப்போது வந்தது. ஆனால் இந்தத் தொடருக்காக முன்கூட்டியே சென்று தயாராக நினைத்த அவரது நோக்கம் பாராட்டுக்குரியது. இங்கே ராகுல் பச்சிளம் குழந்தைக்கு தகப்பன் என்பதை மறக்கக்கூடாது”

இதையும் படிங்க: இந்திய அணியை செலக்சன் தப்பு.. 2வது டெஸ்டில் பும்ரா, தாகூருக்கு பதில் அந்த 2 பேரை சேர்க்கனும்.. ப்ராட் கருத்து

“அந்த சூழ்நிலையிலும் குழந்தையை விட நாடு முக்கியம் என்று அவர் எடுத்த முடிவு பெரியது. ராகுல் நினைத்திருந்தால் நான் பயிற்சிப் போட்டியில் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறேன் என்று எளிதாக சொல்லியிருக்க முடியும். ஆனால் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இந்திய அணியை கவனித்துக் கொள்ள விரும்புவதால் இங்கிலாந்து செல்ல விரும்புவதாக ராகுல் சொன்னார். அவருடைய வார்த்தைகளிலும் கண்களிலும் பசி இருப்பதை நான் பார்க்கிறேன். விராட், ரோஹித் இல்லாததால் சீனியர் பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ள அவர் சிறப்பாக விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement