இவ்ளோ அனுபவம் இருக்குற ரவீந்திர ஜடேஜா ஏன் இப்படி பண்ணாருன்னு புரியல – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay and Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 371 ரன்கள் என்கிற மிக சவாலான இலக்கினை வெகு சிறப்பாக துரத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே தோல்வியை பெற்று ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.

ஜடேஜா தனது அனுபவத்தை யூஸ் பண்ணல : சஞ்சய் மஞ்சரேக்கர்

இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் வேளையில் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா விக்கெட் வீழ்த்தாதும் ஒரு காரணம் என சிலர் குறை கூறி வருகின்றனர். ஏனெனில் இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் பந்துவீசிய அவர் 47 ஓவர்களை வீசி 172 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அனுபவ வீரரான ஜடேஜா ஆடுகளத்தில் தன்மையை கணிக்காமல் மோசமாக பந்து வீசியது தனக்கு ஏமாற்றம் அளித்ததாக முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

உண்மையிலேயே முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர்களை நான் குறைகூற விரும்பவில்லை. ஏனெனில் அவர்களால் முடிந்த அளவிற்கு அவர்கள் தொடர்ச்சியாக பந்து வீசினர். ஆனால் ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியை சரியாக பயன்படுத்தவில்லை என்று நான் கூறுவேன். ஏனெனில் போட்டியின் கடைசி நாளில் ஆடுகளத்தில் அதிகளவு பிளவுகள் இருந்தும் அதனை அவர் பயன்படுத்த தவறிவிட்டார்.

- Advertisement -

இத்தனை ஆண்டுகால அனுபவம் வாய்ந்த ஜடேஜா இப்படி செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய அணியில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் நிச்சயம் ஒரு மாற்றத்தை செய்தாக வேண்டும். அந்த வகையில் இரண்டாவது போட்டியின் போது கட்டாயம் குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டுவர வேண்டும். ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவ் அணிக்குள் வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ஷர்துல் தாகூரை தூக்கிட்டு ஜடேஜாவுடன் அவரை விளையாட வைங்க.. வெற்றி உறுதி – மான்டி பனேசர் கருத்து

அதேபோன்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டியை இரண்டாவது போட்டிக்கான அணிக்குள் கொண்டு வரலாம். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் மிகச்சிறப்பாக செயல்பட்ட அவர் இங்கிலாந்திலும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தன்னிடம் இருப்பதாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement