இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங்கில் இந்தியா 5 சதங்களை அடித்து சாதனைப் படைத்தது. ஆனால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கத் தவறியதால் இந்தியா சிறப்பாக ஃபினிஷிங் செய்யத் தவறியது.
அது போக 7 கேட்ச்களை தவற விட்ட இந்தியாவுக்கு பௌலிங் துறையில் பும்ராவை தவிர்த்து யாரும் கை கொடுக்கவில்லை. அதனால் 148 டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 5 சதங்களை அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக இந்தியா மோசமான உலக சாதனையைப் படைத்தது. முன்னதாக அப்போட்டியில் ரிசப் பண்ட் அற்புதமாக விளையாடி 2 இன்னிங்ஸிலும் சத்தத்தை (134, 118) அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார்.
100க்கு 99 முறை வெற்றியே:
குறிப்பாக முதல் இன்னிங்சில் 99 ரன்களில் இருந்த போது பயப்படாத அவர் சேவாக் போல சிக்ஸருடன் சதத்தை தொட்டார். இந்நிலையில் சதத்தைப் பற்றி கவலைப்படாமல் ரிஸ்க் எடுத்து விளையாடிய ரிசப் பண்ட் ஆட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். அவரைப் போன்ற வீரர்கள் தான் 100க்கு 99 முறை வெற்றிகரமாக செயல்பட முடியும் என்றும் டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
கடைசியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா தோல்வியைச் சந்தித்தது அவமானமானது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் மிகவும் அதீத ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார். அது சில நேரங்களில் உங்களிடம் வெளிச்சத்தில் விரக்தியடைய செய்யும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிசப் பண்ட் 20 முறை 2 இன்னிங்சிலும் 30 ரன்களுக்குள் அவுட்டானதாக நான் பார்த்தேன்”
பெரிய அவமானம்:
“அதற்காக அவர் தனது ஆட்டத்தை மாற்றவில்லை என்பது மிகவும் முக்கியமான விஷயம். அவரைப் போன்ற வீரர் எதிரணிக்கு சவாலைக் கொடுப்பார். அது போன்றவர்கள் தான் 100க்கு 99 முறை வெற்றிகரமான விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். ரிஷப் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ற வகையில் நான் அவருடைய ஆட்டத்தைப் பார்த்தேன்”
இதையும் படிங்க: இதென்ன 3 – 4 பேர் கமிட்டியா? ரோஹித், விராட் மாதிரி சுப்மன் கில்லுக்கு அந்த கன்ட்ரோல் தெரியல.. நாசர் ஹுசைன்
“அவர் இப்படி விளையாடுவதற்கு இது சரியான நேரம், இடம் கிடையாது. ஆனால் முடிவுகளைப் பாருங்கள். அதுவே முக்கியம். அவ்வளவு சிறப்பாக விளையாடியும் இந்தியா வெற்றிக்கோட்டை தாண்டாதது மிகப்பெரிய அவமானம். ஏனெனில் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை வெல்ல தகுதியானவர். இந்த தோல்வியால் மாற்றம் வேண்டும் என்று பெரிய தலைப்புச் செய்திகள் ஊடகங்களில் வரும் என்பது எனக்குத் தெரியும். உண்மையில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இது பதற்றமடைய வேண்டிய நேரமல்ல” என்று கூறினார்.



