2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான ரேஸில் இருந்த இந்திய அணி ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்மூலம் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. அந்தத் தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் முக்கியமான தருணத்தில் இந்திய அணியின் வீரர்கள் தவறவிட்ட கேட்ச்களே அந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்திய அணி தோற்றால் நீங்கள் தான் காரணம் : கொந்தளிக்கும் ரசிகர்கள்
அந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் இழந்த இந்திய அணியானது தற்போது 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கியது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் அனுபவ வீரர்களான அஸ்வின், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வினை அறிவித்ததால் தற்போது சுப்மன் கில் தலைமையில் இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 471 ரன்களை குவிக்க இங்கிலாந்து அணி 465 ரன்களை குவித்தது.
பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவதுஇன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 364 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை தற்போது இந்திய ரசிகர்கள் அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.
ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் சதம் அடித்து அசத்தியிருந்தாலும் பீல்டிங்கில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஏமாற்றத்தை அளித்துள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பென் டக்கெட், ஆலி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரது கேட்சை தவறவிட்டார். அதன்பிறகு தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் அவர் இரண்டு எளிய கேட்ச்களை தவறவிட்டுள்ளார். ஸ்லிப், கல்லி, பவுண்டரி லைன் என அனைத்து ஏரியாக்களிலும் அவர் பீல்டிங் நின்றாலும் கேட்ச்களை தவற விட்டுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பந்துக்கு ரெஸ்பெக்ட் குடுத்து விளையாடுற அந்த மைன்ட் செட் தான் கே.எல் ராகுலின் சக்ஸஸ்க்கு காரணம் – ஹேமங் பதானி
இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் : ஜெய்ஸ்வால் நீங்கள் பேட்டிங்கில் சதம் அடித்தால் போதாது. இத்தனை கேட்ச்களை தவறவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோற்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் என கொந்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.



