இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி துவங்கிய நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டி தற்போது கடைசி நாளில் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.
சங்கக்காராவின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் :
அந்த வகையில் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்கள் குவித்தன. இதன் காரணமாக 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணியானது 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் காரணமாக 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணியானது கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், துணை கேப்டனுமான ரிஷப் பன்ட் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக ஆசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சங்ககாராவின் மாபெரும் ஒரு முக்கிய சாதனையை முறியடித்துள்ளார். அதாவது ஆசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் சங்ககாரா மட்டுமே ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்தார்.
அதாவது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 244 ரன்கள் அடித்திருந்தார். அதுவே ஒரு ஆசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அதிக ரன்கள் அடித்த சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அதனை முறியடித்த ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தது மட்டுமின்றி 252 ரன்கள் குவித்து சங்கக்காராவின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 9 சிக்ஸ் 4 சதம்.. இங்கிலாந்து மண்ணின் ஜாம்பவானாக ரிஷப் பண்ட் 2 ஆல் டைம் உலக சாதனை சமன்
அதுமட்டுமின்றி இத்தனை ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் ஜிம்பாப்வே வீரரான ஆண்டி பிளவருக்கு அடுத்து ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் பண்ட் சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



