வெறும் 34 மேட்ச்லேயே கபில் தேவ் சாதனையை சமன் செய்த பும்ரா.. இந்தியாவின் வெளிநாட்டு ஹீரோவாக சாதனை

Jasprit Bumrah 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கிய முதல் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை கடுமையாக போராடிய இந்தியா 465 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்களை முன்னிலையாகப் பெற்றுக் கொடுத்தார். அடுத்ததாக விளையாடும் இந்தியா 3வது நாளில் 90/2 ரன்களை அடித்து மொத்தம் 96 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

- Advertisement -

கபில் தேவ் போல பும்ரா:

முன்னதாக இந்தப் போட்டியிலும் முகமது சிராத் உள்ளிட்ட மற்ற இந்திய பவுலர்கள் கொஞ்சம் தடுமாற்றமாகவே பவுலிங் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து மறுபுறம் மிகவும் அற்புதமாக பௌலிங் செய்து வரும் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சொல்லப்போனால் 3 கேட்ச், 1 நோ-பால் தவறாமல் இருந்திருந்தால் அவர் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்திருப்பார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் தம்மை நம்பர் ஒன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்த பும்ரா இதையும் சேர்த்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டு மண்ணில் 12வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா சமன் செய்துள்ளார்.

- Advertisement -

வெளிநாட்டு ஹீரோ:

இதற்கு முன் கபில் தேவ் வெளிநாட்டு மண்ணில் விளையாடிய 66 டெஸ்ட் போட்டிகளில் 12 முறை 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். ஆனால் ஜஸ்ப்ரித் பும்ரா வெறும் 34 போட்டிகளிலேயே அவருடைய வாழ்நாள் சாதனையை எளிதாக சமன் செய்துள்ளார். அந்த வகையில் கபில் தேவ் போல நவீன கிரிக்கெட்டில் பும்ரா வெளிநாடுகளில் இந்தியாவின் ஹீரோவாக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: 6 மாசத்துல ஓடிருவான்னு சொன்னாங்க.. இந்தியாவுக்காக கடவுள் சொல்ற வரை இதை செய்வேன்.. பும்ரா பதிலடி

இது போக சேனா நாடுகளில் 150* விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆசிய பவுலர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் 140 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார். அப்படிப்பட்ட பும்ராவுக்கு மற்ற இந்திய முழுமையாக பவுலர்கள் கை கொடுப்பதில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

Advertisement