6 மாசத்துல ஓடிருவான்னு சொன்னாங்க.. இந்தியாவுக்காக கடவுள் சொல்ற வரை இதை செய்வேன்.. பும்ரா பதிலடி

Jasprit Bumrah 5
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலித்து வரும் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தைத் தவிர்ப்பதற்காக இத்தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவே பணத்துக்காக ஐபிஎல் தொடரில் பும்ரா 14 போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பாரா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் கிரிக்கெட்டில் அறிமுகமான போது வித்தியாசமான பவுலிங் ஆக்சன் காரணமாக இவன் 6 மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காமல் ஓடி விடுவான் என்று பலரும் தன்னை விமர்சித்ததாக ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்தது உட்பட தம்மால் முடிந்தளவு இந்தியாவின் வெற்றிக்கு முயற்சித்து வருவதாக பும்ரா விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

6 மாசத்துல ஓடிருவான்:

கடவுள் விரும்பும் வரை விளையாடி இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மக்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை. என்னைப் பற்றி அப்படி எழுதாமல் இப்படி எழுதுங்கள் என்று யாரிடமும் சொல்ல நான் முயற்சிக்கவில்லை. அனைவரும் தாங்கள் நினைப்பதை எழுதும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளார்கள்”

“இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமானது. அதனால் வியூஸ் அல்லது தலைப்புச் செய்தியில் இடம் பிடிப்பதற்காக சிலர் என்னுடையப் பெயரை பயன்படுத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அது எனக்கு முக்கியமல்ல. நான் எப்படி விளையாட வேண்டும் என்று நம்புவதே முக்கியம். ஒருவர் குறிப்பிட்ட வழியில் விளையாட வேண்டும் என்று விரும்பினால் நான் அப்படிப்பட்டவன் கிடையாது”

- Advertisement -

பும்ரா பதிலடி:

“இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதிலேயே என்னுடைய தயாராகும் முறை மற்றும் ஐடியாக்கள் இருக்கும். எனது நம்பிக்கையின் அடிப்படையில் விளையாடியதாலேயே 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல உயர்ந்த எட்ட முடிந்தது. மக்கள் முதலில் என்னால் விளையாட முடியாது என்று சொன்னார்கள். பின்னர் 6 – 8 மாதங்கள் மட்டுமே விளையாடுவார் என்று சொன்னார்கள்”

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால், ஜடேஜாவை திட்டாதீங்க.. 3 கேட்ச் தவற விட இதான் காரணம்.. விதி 99இல் எழுதிருக்கு.. பும்ரா பேட்டி

“ஆனால் அங்கிருந்து தொடர்ந்து விளையாடும் நான் சர்வதேச கிரிக்கெட்டில் 10, ஐபிஎல் தொடரில் 13 வருடங்கள் விளையாடியுள்ளேன். இப்போதும் மக்கள் இவர் போய் விடுவார், ஓய்வு பெறுவார் என்பது போன்ற அதே விஷயங்களை சொல்கிறார்கள். அவர்கள் காத்திருக்கட்டும். அதைப் பற்றி நான் சிந்திக்கப் போவதில்லை. என்னுடைய வேலையை செய்யப் போகிறேன். கடவுள் எனக்காக எழுதியது வரை தொடர்ந்து விளையாடுவேன். என்னுடைய சிறந்த முயற்சிக்கு தயாராவேன். மற்ற அனைத்தையும் கடவுளிடம் விட்டு விடுவேன். எனக்கு கொடுக்கப்பட்ட ஆசிர்வாதத்தை வைத்து இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சிப்பேன்” என்று கூறினார்.

Advertisement