இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டியில் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வெற்ற இங்கிலாந்து முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாளிலேயே இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 359/3 ரன்கள் குவித்தது.
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே சதத்தை அடித்து அமர்க்களம் செய்தார். அதே போல சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே சதத்தை அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். மறுபுறம் இங்கிலாந்து டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைச் சந்தித்தது.
இப்போ சந்தோசமா:
இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங் செய்தது சரியான முடிவல்ல என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். லீட்ஸ் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்து 6 வெற்றிகளைக் கண்டுள்ளது. அதே போல இந்தப் போட்டியிலும் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.
ஆனால் அந்தப் பழைய பஞ்சாங்க முடிவால் பேட்டிங் பிட்ச்சை பயன்படுத்தி இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தை அடித்துள்ளதாக மைக்கேல் வாகன் சாடியுள்ளார். இது பற்றி பிபிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் லீட்ஸில் உள்ள ஒரு பழைய பள்ளி பாரம்பரியவாதி. இங்கே சூரியன் பிரகாசிக்கும் போது வறண்ட வானிலையில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவாகும். ஆனால் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ததாக அறிவித்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது”
மைக்கேல் வாகன் சாடல்:
“மரபுகள் ஜன்னலுக்கு வெளியே தான் இருக்க வேண்டும். நீங்கள் நிகழ்காலத்திற்கு தகுந்தாற்போல் முடிவுகளை எடுக்க வேண்டுமே தவிர பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த காரியங்களை வைத்து செயல்படக் கூடாது. தற்சமயத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து நீங்கள் முடிவெடுக்க வேண்டும். பேட்டிங் தான் தற்போதைய இங்கிலாந்து அணியின் பலமாகும்”
இதையும் படிங்க: வேணாம்ன்னு விமர்சித்த எனக்கே பதிலடி கொடுத்த.. கில் இனிமேல் அதுல தோற்க மாட்டாரு.. மஞ்ரேக்கர் பாராட்டு
“பவுலிங் துறை அனுபவமற்றதாக இருக்கிறது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் தம்முடைய தைரியமான உணர்வைப் பின்பற்றியுள்ளார். அது சில நேரங்களில் மட்டுமே அப்படியே வேலை செய்யும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சிறப்பாக பௌலிங் செய்யும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது.



