நானும் சுப்மன் கில்லும்.. இதைத் தான் பேசி வெச்சு பார்ட்னர்ஷிப் போட்டு சதமடிச்சோம்.. ஜெய்ஸ்வால் பேட்டி

Yashasvi Jaiswal 2
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. லீட்ஸ் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்தியா முதல் நாளில் 359/3 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணிக்கு 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 42 ரன்னில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த அறிமுக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட் ஆனார். இருப்பினும் மறுபுறம் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் இன்னிங்சிலேயே சதத்தை அடித்து அசத்தினார். அத்துடன் லீட்ஸ் மைதானத்தில் சதத்தை அடித்த முதல் இந்திய துவக்க வீரர் என்ற சாதனையையும் படைத்த அவர் 101 ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

129 ரன்கள் பார்ட்னர்ஷிப்:

அவருடன் சேர்ந்து 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சுப்மன் கில் தம்முடைய பங்கிற்கு இங்கிலாந்தை வெளுத்து வாங்கி சதத்தை அடித்து 127* ரன்கள் குவித்துள்ளார். அதே போல மிடில் ஆர்டரில் துணை கேப்டன் ரிசப் பண்ட் பொறுப்புடன் விளையாடி 65* ரன்கள் குவித்துள்ளார். அதனால் முதல் நாளிலேயே இந்தியா வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் நாளில் புதிய பந்தில் அவசரப்படாமல் ஒவ்வொரு செஷனாக பேட்டிங் செய்து நிறைய ரன்கள் குவிக்க வேண்டும் என்று தாமும் சுப்மன் கில்லும் பேசி முடிவெடுத்ததாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “களத்தில் நாங்கள் நிறைய பேசினோம். ஒவ்வொரு செஷனாக விளையாட முயற்சித்து முடிந்தளவுக்கு நிறைய ரன்கள் குவிக்க வேண்டும் என்று பேசி முடிவெடுத்தோம்”

- Advertisement -

அமைதியான கில்:

“குறிப்பாக சுமாரான பந்துகள் வரும் போது அதை அதிரடியாக சரியான இடத்தில் அடிக்க வேண்டுமென்று பேசினோம். அந்த வகையில் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தோம். எங்களுக்கு இடையே நல்ல நட்புறவு இருந்தது. சுப்மன் கில்லுடன் பேட்டிங் செய்தது சிறப்பாக இருந்தது. அவரும் நன்றாக பேட்டிங் செய்தார். குறிப்பாக மிகவும் அமைதியான பொறுமையான வழியில் விளையாடும் அவருடன் நானும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்தேன்”

இதையும் படிங்க: இதெல்லாம் நடக்கும்னு நட்சத்திரத்துல இருக்கு.. நீ கலக்கு.. சுப்மன் கில்லை வாழ்த்திய – யுவ்ராஜ் சிங்

“அவரது தலைமையில் உற்சாகமாக விளையாடுகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தங்களுடைய ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சிக்க உள்ளது. அதே சமயம் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கிறது. அதனால் இந்திய பவுலர்களும் கொஞ்சம் சிரமத்தை சந்தித்து இங்கிலாந்துக்கு எதிராக வெற்றிக்கு போராட வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்.

Advertisement