ஜடேஜாவால் நம்ம டீமுக்கு வீழ்ச்சி தான்.. மீண்டும் வாய் விட்டு மாட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர் – ரசிகர்கள் விமர்சனம்

Manjrekar and Jadeja
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் ஜடேஜாவை விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கர் :

இந்நிலையில் இந்த தொடரின் போது எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? எந்தெந்த வீரர்கள் தடுமாற்றத்தை சந்திப்பார்கள்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவதால் இந்திய அணி மோசமான சூழலை சந்திக்கலாம் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரவீந்திர ஜடேஜாவிற்கு தற்போது முழு திறமை இல்லை என்பதனால் நிச்சயம் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி பிரச்சனைகளை சந்திக்கும். ஏனெனில் இந்தியாவிலும் சரி, இங்கிலாந்திலும் சரி இங்கிலாந்து வீரர்கள் ஜடேஜாவின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவிக்கிறார்கள்.

எனவே இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடினாலும் இங்கிலாந்து வீரர்கள் அவரை எளிதாக பயன்படுத்தி இந்திய அணியை வீழ்த்துவார்கள். எனவே ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் யாதவ் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவது தான் சரியாக இருக்கும். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் யோசிக்கும் விதம் எப்போதுமே மாறுபட்ட ஒன்று.

- Advertisement -

அந்த வகையில் பார்க்கையில் அவர் இந்த தொடரில் ஜடேஜாவையும், குல்தீப் யாதவையும் ஒன்றாக விளையாட வைத்தாலும் வைக்கலாம் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 உலகக் கோப்பை தொடரின் போது ஜடேஜாவின் திறமையை விமர்சித்து பேசியிருந்த சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போது மீண்டும் ஜடேஜாவை விமர்சித்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்து மண்ணில் தோனியின் மகத்தான சாதனையை முறியடிக்க ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு – விவரம் இதோ

ஆனால் ரவீந்திர ஜடேஜாவை பொறுத்தவரை கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பந்துவீச்சில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பேட்டிங்கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி கடைசி டெஸ்டில் சதம் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement