இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் பல்வேறு இந்திய வீரர்கள் முக்கிய சாதனைகளுக்காக காத்திருக்கின்றனர்.
தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட் :
அந்த வகையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் இந்த தொடரிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோனியின் அந்த சாதனையினை முறியடிப்பார் என்றே தெரிகிறது. அந்த வகையில் ரிஷப் பண்ட் நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் :
இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை இங்கிலாந்து மண்ணில் அவர் 778 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதேவேளையில் இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.
இவ்வேளையில் எதிர்வரும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பண்ட் 267 ரன்கள் அடித்தால் தோனியின் அந்த சாதனையை சமன் செய்வார். மேலும் 289 ரன்கள் குவித்தால் தோனியை தாண்டி 800 ரன்கள் குவித்து இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : இந்தியாவிடம் தோத்தா.. பஸ்பால் என்ற பெயரில் இங்கிலாந்தை கெடுத்த அவர் ராஜினாமா செய்யனும்.. நாசர் ஹுசைன்
ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ள ரிஷப் பண்ட் நிச்சயம் இந்த முறையும் அங்கு ஆதிக்கத்தை செலுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதனால் இந்த தொடரில் தோனியின் சாதனையை அவர் எளிதாக முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



