இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மணி இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. மறுபுறம் குறைந்த அனுபவத்தைக் கொண்டுள்ள இளம் இந்திய அணியை அதிரடியாக எதிர்கொண்டு வீழ்த்த இங்கிலாந்து தயாராகியுள்ளது.
முன்னதாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் கேப்டன் – பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போல விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. அதைப் பயன்படுத்தி சொந்த மண்ணில் இங்கிலாந்து எதிரணிகளை அடித்து நொறுக்கி வீழ்த்தி வருகிறது. அதனால் அந்த அணுகுமுறையை மெக்கல்லமின் பட்டப்பெயரான “பஸ்” என்பதுடன் இணைத்து “பஸ்பால்” என இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
பஸ்பால் என்ற பெயரில்:
ஆனால் நிதர்சனம் என்னவெனில் பஸ்பால் அணுகுமுறையைப் பின்பற்றி அந்த அணியால் இந்தியா போன்ற வெளிநாடுகளில் வெல்ல முடியவில்லை. அதனாலேயே தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 2021, 2023, 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்களுக்கும் இங்கிலாந்து அணியால் தகுதி பெற முடியவில்லை. இந்நிலையில் இந்திய தொடரையும் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரையும் இங்கிலாந்து வெல்ல வேண்டும் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இல்லையேல் பஸ்பால் என்ற பெயரில் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முறையை கெடுத்துள்ள மெக்கல்லம் பதவி விலக வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார். இது பற்றி டெய்லி மெயில் பத்திரிக்கையில் ஹுசைன் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் பிராண்டை விரைவான வழியில் விளையாடுகிறது”
ராஜினாமா பண்ணுங்க:
“அவர்கள் பொறுமையாக விளையாடப்படும் கலாச்சாரம் நிறைந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதனால் இங்கிலாந்து தோற்க வேண்டும் என்று சிலர் காத்திருக்கின்றனர். அந்த அணுகு முறையில் இந்தியா மற்றும் ஆஷஸ் தொடர்களை வெல்லாவிட்டால் “பஸ்பால் சிறந்த அணிகளுக்கு எதிராக வேலை செய்யாது என்று அப்போதே சொன்னோம் கேட்டீர்களா?” என்று விமர்சிக்க பலரும் காத்திருக்கிறார்கள்”
இதையும் படிங்க: இந்தியாவை பாருங்க.. ரிஷப் பண்ட்க்கு நான் கேப்டனா இருந்தா இந்த அட்வைஸ் தருவேன்.. சச்சின் அறிவுரை
“கடந்த 15 வருட இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று என்னிடம் கேட்டால் “அற்புதமாக இருந்தது” என்பது என்னுடைய பதிலாக இருக்கும். என்னைப் பொறுத்த வரை அடுத்த 6 மாதங்கள் அவரைப் பற்றி தீர்மானிக்காது. ராப் கீ (இங்கிலாந்து இயக்குனர்) மற்றும் ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோருடைய பதவிகளை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்” என்று கூறினார்.



