வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இலங்கை அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூன் 17-ஆம் தேதி காலே நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
விராட் கோலி மற்றும் பாய்காட் ஆகியோரது சாதனையை முறியடித்த ஆஞ்சலோ மேத்யூஸ் :
அதனை தொடர்ந்து முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வங்கதேச அணி 153.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 495 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பாக அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்களையும், அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ 148 ரன்களையும் குவித்து அசத்தினர்.
அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்களை குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக பத்தும் நிசங்கா 187 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் தனது கடைசி ஆட்டத்தினை விளையாடி வரும் இலங்கை அணியின் அனுபவ வீரரான ஆஞ்சலோ மேத்யூஸ் முதல் இன்னிங்சில் 69 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவர் அடித்த இந்த 39 ரன்கள் மூலம் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜெஃப்ரி பாய்காட் மற்றும் இந்திய வீரரான விராத் கோலி ஆகியோரையும் முந்தி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் ஆஞ்சலோ மேத்யூஸ் நிகழ்த்திய சாதனை யாதெனில் : டெஸ்ட் போட்டிகளில் ஜெஃப்ரி பாய்காட் அவரது சொந்த மண்ணில் (இங்கிலாந்து ) 4356 ரன்களையும், விராட் கோலி அவரது சொந்த மண்ணில் (இந்தியா) 4,336 ரன்களையும் குவித்திருந்தனர்.
இதையும் படிங்க : விராட், ரோஹித், அஸ்வின் இல்லன்னு புலம்பாதீங்க.. அவர் ஒருத்தரே நிறைய தொல்லை கொடுப்பாரு.. பென் ஸ்டோக்ஸ்
இவ்வேளையில் அவர்கள் இருவரையும் கடந்துள்ள ஆஞ்சலோ மேத்யூஸ் நேற்று இந்த போட்டியில் அடுத்த 39 ரன்கள் மூலம் சொந்த மண்ணில் (இலங்கை ) 4362 ரன்கள் விளாசி அவர்களது இந்த சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



