2007 தோனி மாதிரி இந்தியாவுக்கு அட்வான்டேஜ் கிடைச்சுருக்கு.. 1971 மாதிரி சர்ப்ரைஸ் பண்ணுவாங்க.. ராமன் நம்பிக்கை

WV Raman
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. இம்முறை சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி களமிறங்குவதால் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்தக் காலங்களில் தோனி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் அனுபவமிக்க வீரர்களுடன் களமிறங்கியும் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை.

அதனாலேயே 2007க்குப்பின் 18 வருடங்களாக இங்கிலாந்தில் ஒரு தொடரை கூட வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. இந்நிலையில் சீனியர்கள் இல்லாததால் தற்போதைய இந்திய அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் வீரர் டபிள்யூவி ராமன் தெரிவித்துள்ளார். இதே போன்ற சூழ்நிலையில் 2007 டி20 உலகக் கோப்பையில் அனுபவமற்ற தோனி தலைமையில் களமிறங்கி இந்தியா வெற்றி கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

2007 தோனி மாதிரி:

1971ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றதாகவும் ராமன் கூறியுள்ளார். அதே போன்ற வாய்ப்பு தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதைப் பயன்படுத்தி இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெல்லும் என்று ராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திட்டங்களை வகுக்கக் கூடியவர். ஆனால் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரைப் பற்றியும் களத்தில் விளையாடும் கேப்டனுக்கு தான் நன்றாகத் தெரியும். தற்போதைய அணி இந்தத் தொடரில் எவ்வாறு விளையாடப் போகிறது என்ற அச்சம் பலரிடமும் இருக்கிறது”

- Advertisement -

1971 மாதிரி சர்ப்ரைஸ் பண்ணுங்க:

“ஆனால் எனக்கு இதே போன்ற சூழ்நிலையில் தோனி தலைமையில் களமிறங்கிய இந்தியா முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது நினைவுக்கு வருகிறது. அங்கே எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அது போன்ற எதிர்பார்ப்பு இல்லாத சூழ்நிலை தற்போதைய இந்திய அணிக்கு கிடைத்துள்ளது பெரிய சாதகமாகும். இங்கே அவர்கள் ஆதாயமாக்க அனைத்தும் இருக்கிறது. இந்த அணியில் சில ஆச்சரியங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: இந்த 2 ரெக்கார்ட் போதும்.. திறமையான இந்திய அணியை வீழ்த்தி ஆஷஸ்க்கு ரெடியாவோம்.. ரூட் நம்பிக்கை

“இங்கிலாந்து மண்ணில் இந்தியா நிறைய தொடர்களை வெல்லாவிட்டாலும் நாம் பலமுறை அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளோம். பகவத் சந்திரசேகரின் அற்புதமான பவுலிங் முதல் 1971ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் முதல் முறையாக வென்றது வரை இந்தியா எப்போதும் இங்கிலாந்துக்கு ஓரிரு ஆச்சரியத்தைக் கொடுக்கும் அணியாகவே திகழ்கிறது” என்று கூறினார்.

Advertisement