இந்த 2 ரெக்கார்ட் போதும்.. திறமையான இந்திய அணியை வீழ்த்தி ஆஷஸ்க்கு ரெடியாவோம்.. ரூட் நம்பிக்கை

Joe Root
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. அதனால் இம்முறையும் இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமான ஒன்றாக நம்பப்படுகிறது.

ஏனெனில் கடந்த காலங்களில் தோனி, விராட் கோலி தலைமையில் அனுபவ வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணியால் 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரை கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இல்லாத இளம் இந்திய அணியில் போதுமான திறமையும் தரமும் இருப்பதாக இங்கிலாந்து நட்சத்திரம் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இருப்பினும் 2007க்குப்பின் இந்தியாவிடம் சொந்த மண்ணில் தாங்கள் தோற்றதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

பலமான ரெக்கார்ட்:

அத்துடன் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடிய 67 போட்டிகளில் இங்கிலாந்து 36 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்தியா வெறும் 9 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் எஞ்சிய போட்டிகள் டிராவில் முடிந்தன. அந்த வகையில் தங்களுடைய சொந்த மண்ணில் சிறந்த ரெக்கார்டுகளை வைத்திருப்பதால் இம்முறையும் இங்கிலாந்து அணி இந்தியாவை தோற்கடித்து டிசம்பரில் துவங்கும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் என்று ஜோ ரூட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற தொடருக்காக நீங்கள் உற்சாகத்துடன் விளையாடக் காத்திருப்பீர்கள். எங்களுக்கு எதிராக உள்ள எதிரணி காவியத்தைப் போன்றவர்கள். அடுத்ததாக ஆஷஸ் தொடர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் மக்கள் அந்தத் தொடரை இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடருடன் சம்பந்தப்படுத்திப் பார்ப்பார்கள்”

- Advertisement -

ஜோ ரூட் நம்பிக்கை:

“அதே சமயம் நீங்கள் இந்தியா போன்ற சிறந்த அணிக்கு எதிராக சிறப்பாக வேலை செய்ய வேண்டும். இந்தியாவை 3 வகையான கிரிக்கெட்டிலும் பார்க்கும் போது அவர்கள் அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்துள்ளார்கள். அவர்களிடம் சிறப்பான பவுலர்கள், திறமையான பேட்ஸ்மேன்கள், வலுவான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மா வழங்கிய இந்த பரிசை எப்போதும் என்னால் மறக்க முடியாது – ஆயுஷ் மாத்ரே நெகிழ்ச்சி

“அதனால் உலகில் எங்கே சென்றாலும் அவர்கள் போட்டியைக் கொடுப்பார்கள். ஆனால் சொந்த மண்ணில் நாங்கள் வைத்திருக்கும் ரெக்கார்ட் இந்தத் தொடரை அருமையானதாக மாற்றும். அந்த ரெக்கார்டுகள் கொடுக்கும் தன்னம்பிக்கையுடன் நாங்கள் விளையாடச் செல்கிறோம். அதே சமயம் இந்திய அணி கொடுக்கப் போகும் போட்டியை நாங்கள் மதிக்க உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement