இனிமேல் இந்தியாவுக்கு விராட் கோலியின் இடத்தில் அவர் தான் ஆடுவாரு.. 3வது இடம் மட்டுமே பாக்கி.. பண்ட் அறிவிப்பு

Rishabh Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக துவங்கும் அந்தத் தொடரில் தலைமையிலான இளம் அணி களமிறங்குகிறது. இம்முறை ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை.

அதனால் அவர்களுக்குப் பதிலாக விளையாடப் போவது யார்? இந்திய அணியின் புதிய பேட்டிங் வரிசை எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் கேஎல் ராகுல் – ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடுவார் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் அந்த ஜோடி அபாரமாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தது.

- Advertisement -

விராட் கோலி இடத்தில்:

இந்நிலையில் இந்திய அணியின் புதிய பேட்டிங் வரிசையில் 3வது இடத்தில் விளையாடுவது யார் என்பது பற்றி மட்டுமே இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். மற்ற படி 10 வருடங்களுக்கு மேலாக விளையாடி நிறைய வெற்றிகளுக்கு வித்திட்ட விராட் கோலி விளையாடிய 4வது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் விளையாடுவார் என்று அவர் அறிவித்துள்ளார்.

நம்பர் 5வது இடத்தில் தாம் விளையாட உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “3வது இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள் என்பதைப் பற்றி இன்னும் விவாதம் சென்று கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் 4, 5வது இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சுப்மன் 4வது இடத்தில் விளையாடுவார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

3வது இடத்தில் யார்:

“நான் மீண்டும் 5வது இடத்தில் விளையாடுவேன். தற்சமயத்தில் மற்ற இடங்களைப் பற்றி நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இறுதியில் நல்ல முடிவை எடுக்க உள்ளோம்” என்று கூறினார். அவருடைய கருத்தை வைத்து 3வது இடத்தில் கருண் நாயர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள அவர் சமீபத்தில் இரட்டை சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

இதையும் படிங்க: தோனி எனும் ஒருத்தருக்காக யுவி, சேவாக், ஹர்பஜன், ஜஹீர் இருந்த வீட்டை கொளுத்தலாமா? யோக்ராஜ் சாடல்

அதே சமயம் தமிழக வீரர் சாய் சுதர்சன் 3வது இடத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் கருணை நாயர் 6வது இடத்தில் களமிறங்குவதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் எஞ்சிய இடங்களில் யார் விளையாடப் போகிறார்கள் என்பதை வரும் வெள்ளிக்கிழமை அன்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement