ரோஹித், கோலியை இந்தியா மிஸ் பண்ணும்.. அஸ்வின் பாய் இல்லாத எனக்கு அவர் தான் கம்பனி.. குல்தீப் பேட்டி

Kuldeep Yadhav
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கி வெற்றிக்காக போராட உள்ளது. இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர்கள் ஓய்வு காரணமாக விளையாடவில்லை.

எனவே இளம் இந்திய அணி சவாலான இங்கிலாந்து மண்ணில் எப்படி அசத்தப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பேருந்தில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் இடத்தில் தாம் விரும்பினாலும் மரியாதை காரணமாக உட்காருவதில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். அத்துடன் பௌலிங் துறையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய தோழரைப் போல் இருந்து வந்ததாக குல்தீப் கூறியுள்ளார்.

- Advertisement -

ரோஹித், அஸ்வின் இடங்கள்:

இருப்பினும் ஓய்வு காரணமாக அஸ்வின் விடைபெற்றதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா தமக்கு தோழராக இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி குல்தீப் பேசியது பின்வருமாறு. “ரோஹித் பாய் இடத்தை நான் எப்போதும் எடுத்துக்கொள்ள மாட்டேன். இப்போதெல்லாம் நான் ஜடேஜா பாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன். ஒரு ஸ்பின்னராக அது எனக்கு முக்கியமான ஒன்றாகும்”

“ஏனெனில் அஸ்வின் பாய் இங்கே இல்லை. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். என்னுடைய கிரிக்கெட்டை விளையாடத் துவங்கிய போது அவர்கள் இருவருடன் சேர்ந்து விளையாடினேன். என்னுடைய ஸ்பின் பார்ப்பனராக ஜடேஜா பாய் இருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் அவருடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். சீனியர்கள் விடைபெறும் போது ஒரு விதமான உணர்வு இருக்கும்”

- Advertisement -

மிஸ் செய்யும் இந்தியா:

“இந்திய அணிக்காக விராட் ரோஹித் பாய் நிறைய செய்துள்ளார்கள். எனவே அவர்களை மிஸ் செய்வோம். ஆனால் இது இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பு. ஆம் நாங்கள் அனைவரும் சீனியர்களை மிஸ் செய்வோம். ஆனால் இது இளம் வீரர்கள் அசத்துவதற்காக கிடைத்த உற்சாகமான வாய்ப்பாகும். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சியில் கடினமாக உழைத்து வருகிறார்கள்”

இதையும் படிங்க: இங்கிலாந்தின் இந்த பலவீனத்தை.. அங்க யூஸ் பண்ணா இந்தியா கோப்பையை ஜெய்க்கலாம்.. ஹைடன் வெளிப்படை

“தங்களுடைய வீரர்கள் அனைவரும் அசத்துவதற்காக தயாராகி வருகிறார்கள்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து ஜூன் இருபதாம் தேதி முதல் இந்தியா – இங்கிலாந்து தொடர் தொடங்குகிறது. அந்தத் தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் முதல் தொடராக துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement