பணத்துக்காக இதை செய்ய சொன்னாங்க.. ஆனா இந்தியாவுக்காக செய்யல.. கம்பேக் பற்றி கருண் நாயர்

Karun Nair 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த அணியில் கருண் நாயர் 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ளது பலரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகமான அவர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் முச்சதத்தை அடித்து வீரேந்திர சேவாக்கிற்கு நிகராக சாதனை படைத்தார். அதன் பின் கிடைத்த வாய்ப்புகளில் பெரிய ரன்கள் குவிக்கத் தவறிய அவரை இந்திய அணி கழற்றி விட்டது. அவருக்கு போட்டியாக நிறைய இளம் வீரர்கள் வந்ததால் கருண் நாயர் கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

பணத்துக்காக டி20:

இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் கர்நாடக பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாடினார். பின்னர் கர்நாடகா மாநில அணியிலிருந்து வெளியேறிய அவர் அணிக்காக உள்ளூரில் விளையாடத் துவங்கினார். அந்த வாய்ப்பில் கடந்த ரஞ்சிக் கோப்பையில் 863 ரன்கள் குவித்து விதர்பா கோப்பையை வெல்ல உதவினார். மேலும் விஜய் ஹசாரே கோப்பையில் 779 ரன்கள் குவித்த அவர் ஐபிஎல் தொடரிலும் டெல்லிக்காக ஓரளவு அசத்தினார்.

அதன் காரணமாக 8 வருடங்கள் கழித்து இந்திய அணிக்காக தேர்வான அவர் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரட்டை சதத்தை அடித்தார். அதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் கருண் நாயர் தமக்கான வாய்ப்பைப் பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் 8 வருடங்களாக வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று பணத்துக்காக டி20 போட்டிகளில் விளையாடுமாறு பலரும் நம்மிடம் சொன்னதாக கருண் நாயர் கூறியுள்ளார்.

- Advertisement -

நாட்டுக்காக கருண் நாயர்:

இருப்பினும் அதை ஏற்காத தாம் நாட்டுக்காக மீண்டும் விளையாட வந்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு முக்கியமான இந்திய வீரர் என்னை அழைத்து நீங்கள் ஓய்வு பெற வேண்டும் என்று என்னிடம் சொன்னது நினைவிருக்கிறது. ஏனெனில் டி20 லீக்கில் விளையாடுவது உங்களுக்கு பாதுகாப்பான பணத்தைக் கொடுக்கும் என்று அவர் சொன்னார்”

இதையும் படிங்க: பும்ரா இல்ல.. இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் மேட்ச் வின்னர் அவர்தான் – மைக்கல் கிளார்க் கருத்து

“பணத்துக்காக அதை செய்வது எளிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை நான் எப்போதும் விடப் போவதில்லை. அது நடந்து 2 வருடங்கள் ஆகிறது. தற்போது நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் பாருங்கள். அதை வேடிக்கையானது என்றாலும் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு நான் போதுமானவன் என்பது எனக்குத் தெரியும்” எனக் கூறினார்.

Advertisement