8 வருஷம் வெய்ட் பண்ணுங்க பாக்கலாம்.. இந்தியாவை நிராகரித்த ஐசிசி.. இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் ஜாக்பாட்

Ind eng
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 11ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலில் 2 இடங்களைப் பிடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.

அதன் வாயிலாக 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியனாக முன்னேறி தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. மறுபுறம் 29 வருடங்கள் கழித்து ஐசிசி ஃபைனலில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கோட்டை விட்டது.

- Advertisement -

8 வருஷம் வெய்ட் பண்ணுங்க:

இந்நிலையில் 2027, 2029, 2031 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளின் இறுதிப்போட்டியை நடத்துவதற்கான உரிமையை ஐசிசி விரைவில் அறிவிக்க உள்ளது. அதை நடத்துவதற்காக இங்கிலாந்துக்கு போட்டியாக இந்தியாவும் தங்களுடைய பெயரை ஐசிசியிடம் சமர்ப்பித்தது. ஆனால் அப்போட்டியில் இந்தியாவை புறக்கணித்துள்ள ஐசிசி இங்கிலாந்துக்கு அடுத்த 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளை நடத்துவதற்கான உரிமைகளை வழங்க முடிவெடுத்துள்ளது.

ஏனெனில் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றால் ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைக்கும். ஒருவேளை இந்தியா தகுதி பெறாமல் போகும் ரசிகர்களின் ஆதரவு பாதிக்கும் மேலாக குறைந்து விடும். ஆனால் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு ஜாக்பாட்:

சொல்லப்போனால் 2021, 2023, 2025 ஃபைனல்கள் இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்தப் போட்டிகளில் இங்கிலாந்து விளையாடாத போதிலும் அந்நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் பொதுவான அணிகளுக்கு நிறைய ஆதரவைக் கொடுத்தனர். அதன் அடிப்படையிலேயே அடுத்த 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் ஜாக்பாட் வாய்ப்பு இங்கிலாந்து கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: 3 ரன் அவுட் மிஸ்.. காமெடி செய்த வீரர்களால் கடுப்பான அஸ்வின்.. 12.3 ஓவரிலேயே 151 ரன்ஸ்.. திண்டுக்கல் வெற்றி

இது பற்றி டெலிகிராப் இணையத்தில். “வரலாறு மற்றும் கௌரவம் அடிப்படையில் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை நடத்த லார்ட்ஸ் விருப்பமானதாக இருக்கும். அது பற்றிய முடிவு ஆரம்பக்கட்டங்களில் நிலையில் இருக்கிறது. லண்டன் உலகளாவிய பயண மையமாக இருப்பதால் இயற்கையான தேர்வாக அமைகிறது. ஒருவேளை இந்தியா அடுத்த ஃபைனலுக்கு தகுதி பெற்றால் சிறப்பானதாக இருக்கும். இல்லையென்றாலும் ஃபைனலுக்கு வரும் அணிகள் இங்கே ஆதரவைப் பெறுவார்கள்” என்று செய்தி வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை நடத்த குறைந்தது 2033 வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

Advertisement