ரோஹித் சர்மா வெளியேறிய பிறகு இந்திய அணியின் டெஸ்ட் துவக்க வீரர் யார்? விவரம் இதோ?

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து மைதானத்தில் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

ரோஹித்தின் இடத்தில் களமிறங்கப்போவது யார்? :

அதன் காரணமாக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுதுள்ளது. இந்திய அணியில் தற்போது கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு பதிலாக எந்த வீரர் துவக்க வீரராக விளையாடுவார்? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று விதமான பார்மேட்டிலும் ரோஹித் சர்மாவே துவக்க வீரராக விளையாடி வந்தார். அவரது சிறப்பான பங்களிப்பு இந்திய அணிக்கு உதவி வந்ததன. அதன் காரணமாகவே அவரை எவ்வித வடிவத்தில் இருந்தும் துவக்க வீரருக்கான இடத்தில் இருந்தும் நீக்க முடியவில்லை.

இந்நிலையில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்று விட்டதால் அவரது அந்த இடத்தை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ள வேளையில் தற்போது டெஸ்ட் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ரோகித் சர்மாவிற்கு மாற்றுவீராக கே.எல் ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அனுபவ வீரராக கே.எல் ராகுல் இருக்கிறார்.

இதையும் படிங்க : 27 வருடம்.. ஆஸியை சாய்த்த தெ.ஆ.. சோக்கர் பட்டத்தை உடைத்து டெஸ்ட் சாம்பியனாக சரித்திர சாதனை வெற்றி

அதிலும் குறிப்பாக தற்போது உள்ள இந்திய அணியில் எந்த ஒரு வீரரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத வேளையில் அவரே துவக்க வீரராக விளையாடுவார் என்று தெரிகிறது. அதுமட்டும் இன்றி இன்னும் பல ஆண்டுகள் அவரால் இந்திய அணிக்கு பங்களிப்பை அளிக்க முடியும் என்பதால் அவரே தொடர்ச்சியாக துவக்க வீரராக விளையாடுவார் என்றும் தெரிகிறது.

Advertisement