ஷேன் வார்னே மாதிரி குல்தீப் அதை யூஸ் பண்ணி கலக்குவாறு.. இங்கிலாந்தில் சான்ஸ் கொடுங்க.. பரத் அருண்

- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. இம்முறை ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் ஓய்வு காரணமாக விளையாடவில்லை.

அதனால் சாய் சுதர்சன் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரும்பாலான மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்காது. அதனால் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 ஸ்பின்னருடன் விளையாடுவதே இங்கிலாந்தில் வெற்றி பெறுவதற்கான டெம்ப்ளேட்டாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஷேன் வார்னே மாதிரி:

அது போன்ற சூழ்நிலையில் சுழல் பந்து வீச்சு துறையில் ரவீந்திர ஜடேஜா தம்முடைய பேட்டிங் திறமை காரணமாக வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக முழுநேர ஸ்பின்னரான குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் ஓடுவதால் ஏற்படும் சிதைவை (ரஃப்) பயன்படுத்துவதே ஸ்பின்னர்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கான வழி என்று இந்திய அணியின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.

அது போன்ற சூழ்நிலையில் ஜாம்பவான் ஷேன் வார்னே போல குல்தீப் யாதவ் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுப்பார் என்று அவர் கூறியுள்ளார். எனவே அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் பரத் அருண் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் மணிக்கட்டு ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்”

- Advertisement -

இந்தியாவில் குல்தீப் யாதவ்:

“பிட்ச்சில் ஆரம்பத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கலாம். அது போன்ற சூழ்நிலையில் மணிக்கட்டு ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவி கிடைக்கும். அதே போல பவுலர்கள் உருவாக்கும் ரஃப் உதவி செய்யும். ஆனால் அதை சரியாக பயன்படுத்துவது தனி கலையாகும். இவை அனைத்தும் வெறும் பவுலிங் பற்றியது மட்டும் கிடையாது”

இதையும் படிங்க: விராட் கோலி – ஜோ ரூட், ஆண்டர்சன் – பும்ரா இந்த 2 ஜோடியில் யார் பெஸ்ட்? தனது கருத்தை வெளிப்படுத்திய – மான்டி பனேசர்

“அதைப் பற்றி நினைக்கும் போது ஷேன் வார்னே நம்முடைய மனதில் உடனடியாக நினைவுக்கு வருவார். அவரைப் போலவே குல்தீப் யாதவிடம் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான திறன்களைக் கொண்டுள்ளார். நம்முடைய பௌலிங் அட்டாக்கை பார்க்கும் போது அது அனுபவமற்றதாக தெரிகிறது. ஆனால் நம்முடைய பந்து வீச்சில் நிறைய திறமையும் ஆற்றலும் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement