இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. இந்நிலையில் அந்தத் தொடருக்கான கோப்பையை சச்சின் டெண்டுல்கர் – ஜேம்ஸ் ஆண்டர்சன் என்று பெயரில் மாற்றப்படுவதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது.
இதுவரை பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்டு வந்த அந்தத் தொடரின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இப்திகார் அலி கான் பட்டோடி மற்றும் அவருடைய மகன் மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோர் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுக்காகவும் விளையாடினர். 1940 – 1950 காலகட்டங்களில் இருநாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் முக்கிய பங்காற்றினர்.
உதயமான சச்சின் – ஆண்டர்சன்:
அதை கௌரவிக்கும் வகையில் 2007 முதல் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கள் பட்டோடி கோப்பை என்றழைக்கப்படும் என அந்நாட்டு வாரியம் அறிவித்தது. அந்தக் கோப்பையை முதல் முறையாக ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா வென்று சாதனை படைத்தது. அதுவே இங்கிலாந்து மண்ணில் இந்தியா கடைசியாக வென்ற டெஸ்ட் தொடராகும்.
அதே போல இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் ஆண்டனி டி மெல்லோ டிராபி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பெயரை விட சச்சின் – ஆண்டர்சன் பெயரில் கோப்பையை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று இங்கிலாந்து வாரியம் கருதுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில்:
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்காக ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் முதல் முறையாக 10000 டெஸ்ட் ரன்கள் கடந்து சாதனை படைத்தனர். அதனால் அவர்களுடைய பெயர் ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடருக்கு சூட்டப்பட்டது. அதே போல சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: டிஃபன்ஸ் இல்லனாலும் சேவாக் ரூட்டை ஃபாலோ பண்ணா இங்கிலாந்தில் அசத்தலாம்.. கில்லுக்கு பாண்டிங் அறிவுரை
ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்துக்காக அதிக விக்கெட்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். அவர்கள் இருவரும் அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய டாப் 2 வீரர்களாக உலக சாதனை படைத்துள்ளனர். எனவே அவர்களுடைய பெயர்கள் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சூட்டப்படுவதாக அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஜூன் 11ஆம் தேதி லண்டனில் துவங்கும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அந்த புதிய கோப்பையை சச்சின் – ஆண்டர்சன் ஆகியோர் அறிமுகப்படுத்த உள்ளனர்.



