இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்டது. அதில் சுப்மன் கில் தலைமையில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த அணியின் வீரர்களின் அறிவிப்பு வெளியானதிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு குடுங்க : ரிக்கி பாண்டிங் ஆதரவு
ஏனெனில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்களது இடத்தை நிரப்ப சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் இந்திய அணியின் உள்ள குறைகளுக்கு ஏற்ப வீரர்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதேவேளையில் பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ள இந்திய அணி சரியான ஒரு அணிதான் என்றும் அவர்கள் இங்கிலாந்து மண்ணில் சாதிக்க அதிக வாய்ப்புள்ளது என்று பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வெளியிடப்பட்ட இந்த இந்திய அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம்பெறாதது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்றுள்ள இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்படுவார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தற்போது விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
நான் பார்த்தவரை அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பான பந்துவீச்சாளர். அதுமட்டும் இன்றி அணி வீரர்களிடமும் அவர் சகஜமாக பழகக்கூடிய ஒருவர். எனவே அவரைப் போன்ற குணமுடைய ஒரு வீரர் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பது அவசியம். ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடைய அவர் 6 அடி 4 அங்குல உயரத்தில் இருப்பதால் அவருடைய இந்த கூடுதல் உயரம் இங்கிலாந்தில் டியூக் பந்துகளை வீச அதிகளவில் உதவும்.
இதையும் படிங்க : இறுதிபோட்டியில் ஜெயிக்கப்போவது அவங்கதான்.. ஆட்டநாயகன் அவர் தான் – ஷேன் வாட்சன் கணிப்பு
மேலும் தனது பந்துவீச்சில் அதிக திறன்களை வைத்திருக்கும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயமாக இந்திய அணிக்கு பயனுள்ள செயல்பாட்டை வெளிப்படுத்துவார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவருக்கு இருக்கும் கூடுதல் உயரம் அவரது பந்துவீச்சில் நல்ல பவுன்ஸ் மற்றும் ஸ்விங்கை பெற்று தரும். எனவேதான் அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வேண்டும் என்று தான் கூறுவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



