இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விட்டதால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலான தொடராக மாறியுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் இடம்பெறாதது ஏன்? : கவுதம் கம்பீர்
ஏற்கனவே ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்களின் கீழ் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இதன் காரணமாக இந்த தொடரானது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமைய காத்திருக்கிறது. அதேவேளையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏனெனில் கடந்த ஆண்டு கே.கே.ஆர் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்ற அவர் அதன்பிறகு உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி மும்பை அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இப்படி அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.
அதுமட்டும் இன்றி தற்போதும் 2025 ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் அவர் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணியை அழைத்துச் சென்றுள்ள வேளையில் அவருக்கு ஏன் டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கவில்லை? என்ற கேள்வி அதிகளவு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் இடம் பெறவில்லை என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் கூறுகையில் :
இதையும் படிங்க : பஞ்சாப் – பெங்களூரு போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? கணிப்பினை வெளிப்படுத்திய – தமிழகவீரர் அஷ்வின்
“நான் ஒன்றும் தேர்வுக்குழுவின் தலைவர் கிடையாது” என பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார். அதோடு அவரது பதிலில் திமிர் தனமும் இருப்பதாக சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்கள் கம்பீரின் இந்த பதிலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



