ஐபிஎல் 2025 கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மோசமான சாதனை படைத்தது. இதற்கிடையே அந்த அணியின் கேப்டன் தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்பது சந்தேகமாக காணப்படுகிறது. அது பற்றி கேட்டதற்கு அடுத்த வருடம் வருவேன் வராமலும் செல்வேன் என்று தோனி மறைமுகமான பதிலைக் கொடுத்தார்.
இந்நிலையில் மிகச் சிறந்த ஃபிட்னஸ் கொண்ட விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு பெற்றதாக முன்னாள் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார். அப்போது இன்னும் 2 வருடங்கள் விளையாடத் தகுதியான நீங்கள் ஏன் ஓய்வு பெற்றீர்கள் என்று விராட் கோலியிடம் அனைவரும் கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தோனியின் நிலைமை அப்படி இல்லை என்று முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே நலனுக்காக:
எனவே சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் முரளி கார்த்திக் பேசியது பின்வருமாறு. “சில விஷயங்கள் நிற்கக் கூடாது என்று நாம் விரும்புவது போல தோனி விளையாடும் வரை உலகம் பார்க்க விரும்பும். ஆனால் சில நேரங்களில் நீங்கள் விரும்பக்கூடியவர் வரவேற்பில் அதிகம் இருக்கக் கூடாது என்று சொல்ல வேண்டிய நிலை வரும்”
“தோனி அல்லது யாராக இருந்தாலும் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். தற்போது விராட் கோலி ஓய்வு பெற்று விட்டார். இப்போது 36 வயது மட்டுமே நிரம்பியுள்ள உங்களிடம் இன்னும் 2 – 3 வருடம் இருக்கிறது என்று விராட் கோலியிடம் அனைவரும் சொல்கின்றனர். ஆனால் தோனியை பொறுத்த வரை உங்களுக்கு தெரியாது. அவர் தனது இடது கைக்கு தெரிவதை வலது கைக்கு தெரிய விடமாட்டார்”
ஓய்வு பெறுங்க:
“அதனால் அவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நாம் கண்டறிவது கடினம். ருதுராஜிடம் கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டதால் அடுத்த வருடம் தோனி வந்தாலும் அவருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட மாட்டாது. அப்படிப்பட்ட நிலையில் தோனி சிஎஸ்கே அணியின் நன்மையை நினைக்கிறாரா அல்லது வேறு எதையும் நினைக்கிறாரா என்பது தெரியாது”
இதையும் படிங்க: எதிர்வரும் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – விவரம் இதோ
“எப்படியும் ருத்ராஜிடம் இருந்து கேப்டன்ஷிப் பொறுப்பை தோனியிடம் கொடுக்க மாட்டார்கள். அவருடைய இடம் நிரப்புவதற்கு மிகவும் பெரியது. இருப்பினும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வழியில் கேப்டன்ஷிப் வேலையை செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் உங்களுடைய இடத்தில் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக அவரை அவரது இடத்தில் செயல்படும் வழியைக் கண்டறிய வழி விட வேண்டும் என்று கூறினார்.



