சிஎஸ்கே அணிக்கு வந்த நேரம்.. இந்திய அணியின் கேப்டனான ஆயுஷ் மாத்ரே.. சூர்யவன்சிக்கும் வாய்ப்பு

Ayush Mhatre
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்காக அந்த அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு சென்னை அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்துள்ளது.

அந்த வாய்ப்பில் பவர் பிளே ஓவர்களில் அதிரடியான துவக்கத்தைக் கொடுத்த அவர் முடிந்தளவுக்கு சென்னை அணியும் வெற்றிக்குப் போராடினார். குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக 94 ரன்கள் அடித்த அவர் வெற்றிக்கு போராடியது பலரது பாராட்டுக்கள் பெற்றுள்ளது. இதுவரை 206 ரன்களை 188 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ள அவர் சிஎஸ்கே அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுகிறார்.

- Advertisement -

கேப்டனாக வாய்ப்பு:

இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அண்டர்-19 அணி அங்கே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு முன் மும்பை அணிக்காக உள்ளூரிலும் அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே வேகத்தில் தற்போது ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியில் தோனி தலைமையில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் சிஎஸ்கே அணிக்கு வந்து அசத்திய அதிர்ஷ்டமான நேரத்தில் அவருக்கு இந்திய அண்டர்-19 அணியின் கேப்டனாகும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல ராஜஸ்தான் அணிக்காக 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்சி அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

சூர்யவன்சிக்கும் வாய்ப்பு:

குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த வீரராக படைத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீரராகவும் சாதனைப் படைத்தார். அதனால் அவருக்கும் அண்டர்-19 அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் ஜூன் 27ஆம் தேதி துவங்கும் இங்கிலாந்து தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அண்டர்-19 அணி:

இதையும் படிங்க: 2026இல் சிஎஸ்கே ஜெய்க்க இந்த 7 பேரை கழற்றி விடனும்.. ஜடேஜாவை ட்ரேட் பண்ணுங்க.. ஆகாஷ் சோப்ரா

ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்சி, விஹான் மல்ஹோத்ரா, மயுல்ராஜ்சிங் சவ்டா, ராகுல் குமார், அபியன் குண்டு (துணை கேப்டன் – கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (கீப்பர்), ஆர்எஸ் ஆம்ப்ரிஷ், கனிஷ்க் சொஹான், கிளன் பட்டேல், ஹெனில் பட்டேல், யுதஜித் குகா, பிரணவ் ராகவேந்திரா, முகமத் எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜித் சிங்
ரிசர்வ்: நமன் புஷ்பக், டி தீபிஷ், வேதாந்த் திரிவேதி, விகால்ப் திவாரி, ஆலக்ரீத் ராபோல் (கீப்பர்)

Advertisement