விராட் கோலியின் மாபெரும் சாதனையை இன்று முறியடிக்க காத்திருக்கும் கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL Rahul and Kohli
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று மே 18-ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டமானது நடைபெறயுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 6 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கே.எல் ராகுல் :

இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தினால் தான் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை நோக்கி செல்ல முடியும். அதனால் இந்த ஆட்டமானது டெல்லி அணிக்கு மிக முக்கியமான ஆட்டமாக மாறியுள்ளது. அதேவேளையில் தற்போது 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 8 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் வேளையில் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று விட்டால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிடும்.

- Advertisement -

இதன் காரணமாக குஜராத் அணிக்கும் இது முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.

அந்த வகையில் இந்திய வீரராக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி தனது 243 வது இன்னிங்சில் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது கே.எல் ராகுல் இன்று விளையாட இருக்கும் 224-வது இன்னிங்ஸ்லயே அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு காத்திருக்கிறது. இந்த போட்டியில் அவர் 33 ரன்கள் எடுத்தால் 19 இன்னிங்ஸ்களுக்கு முன்பாகவே விராட் கோலியின் அந்த சாதனையை முறியடிப்பார் என்று உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி இன்னும் 2 வருடம் விளையாடிருக்கனும்.. அந்த மாதிரி 90% பிளேயர்ஸை விட சிறந்தவர்.. சேவாக் ஏமாற்றம்

உலக அளவில் டி20 போட்டிகளில் அதிவேகமாக 8,000 ரன்களை அடித்த வீரர்களாக கிரிஸ் கெயில் 213 இன்னிங்ஸ்களிலும், பாபர் அசாம் 218 இன்னிங்ஸ்களிலும் 8000 ரன்களை அடித்து முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேளையில் அந்த பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வருவதற்கு கே.எல் ராகுலுக்கு பிரகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement