விராட் கோலிக்கு பாரத ரத்னா கொடுங்க.. கூடவே டெல்லியில் அந்த கெளரவத்தையும் கொடுங்க.. ரெய்னா கோரிக்கை

Suresh Raina
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17ஆம் தேதி துவங்கியது. பெங்களூருவில் துவங்கிய எஞ்சிய போட்டிகளின் முதலாவது போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. அந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அப்போட்டியில் ஏராளமான ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு வெள்ளை ஜெர்ஸியை அணிந்து வந்து மரியாதை செய்தது நெஞ்சைத் தொடுவதாக அமைந்தது.

2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி 123 போட்டிகளில் 9230 ரன்களை குவித்து 30 சதங்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். அதை விட 2014இல் தோனி ஓய்வு பெற்ற போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 7வது இடத்தில் திண்டாடியது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தனது ஆக்ரோஷமான அணுகு முறையில் இந்திய அணியை மாற்றியமைத்தார்.

- Advertisement -

பாரத ரத்னா கொடுங்க:

அவரது தலைமையில் 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் இடத்தில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்திய அணி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அந்த வகையில் விராட் கோலி தலைமையில் 68 போட்டிகளில் இந்தியா 40 வெற்றிகளை குவித்தது.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கண்டத்தின் கேப்டன் என்ற இரட்டை சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். இது போக 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகளை இந்தியா வெல்வதற்கும் அவர் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ரெய்னா கோரிக்கை:

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கிற்காக விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விராட் கோலிக்கு அவரது சொந்த ஊரில் ஃபேர்வெல் போட்டியை நடத்தி விடை கொடுங்கள் என்றும் பிசிசிஐயை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ரெய்னா பேசியது பின்வருமாறு. “இந்திய அரசாங்கம் விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: வெளியில் உட்காந்து பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. ராஜஸ்தான் அணிக்கு கம்பேக் கொடுப்பது பற்றி – சஞ்சு சாம்சன் பேட்டி

“ஏனெனில் இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் நிறைய சாதித்துள்ளார். அதே போல டெல்லியில் விராட் கோலிக்கு ஃபேர்வெல் போட்டியை கொடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். அங்கே அவருடைய குடும்பம் பயிற்சியாளர் ஆகியோர் இருக்க வேண்டும். நாட்டுக்காக நிறைய செய்த விராட் கோலியை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். அவர் ஃபேர்வெல் போட்டிக்கு தகுதியானவர்” என்று கூறினார்.

Advertisement