விராட் கோலி சொன்ன அந்த வார்த்தை தான் என்னை ஓகே சொல்ல வைத்தது.. கேப்டன் பதவி குறித்து – ரஜத் பட்டிதார் பேட்டி

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய 11 ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் மூன்று லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

விராட் கோலி கூறிய வார்த்தைகள் தான் உத்வேகத்தை கொடுத்தது : ரஜத் பட்டிதார்

இந்த மூன்று ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றால் கூட அந்த அணி முதல் இரண்டு இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி. கடந்த 17 ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை வெல்லாத இந்த அணிக்கு இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியை ஏற்றதற்கு விராட் கோலி கூறிய சில வார்த்தைகளை முக்கியமானதாக அமைந்ததாக ரஜத் பட்டிதார் வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

முதன் முதலில் நான் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்புக்கான தகட்டை பிடிக்கும் போது என் மனதில் எதுவும் தோன்றவில்லை வெறுமையாக உணர்ந்தேன். ஆனால் விராட் கோலி என்னிடம் அந்த தகட்டை கொடுக்கும் போது : “கேப்டன் பதவிக்கு நீ தகுதியானவன்”, “அந்த தகுதியை நீதான் உனது சொந்த உழைப்பில் சம்பாதித்துள்ளாய்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறிய அந்த வார்த்தைகள் தான் என்னை கேப்டன் பதவியை ஏற்று முழு மனதுடனும், உத்வேகத்துடனும் செயல்பட உதவியது. அவர் அப்படி சில வார்த்தைகளை சொன்ன பிறகுதான் நான் இயல்பு நிலைக்கு வந்தேன். மேலும் விராட் கோலி எப்போது வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்தாலும் நான் அவர் அருகில் நின்று பார்க்கிறேன். அவரிடம் இருந்து பேட்டிங் நுணுக்கங்களை முடிந்த அளவு கற்றுக் கொண்டு வருகிறேன்.

இதையும் படிங்க : ஓய்வானது ஆச்சர்யம்.. 10000 ரன்ஸ் தவறியதற்காக விராட் கோலி கவலைப்பட மாட்டாரு.. இதான் காரணம்.. சாஸ்திரி

அவருடன் ஒன்றாக ஓய்வறையை பகிர்ந்து கொள்வதால் எனக்கு அவரிடம் இருந்து பெரிய அனுபவங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. என்னால் முடிந்தவரை அவரிடம் இருந்து அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறேன் என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement