விராட் கோலியை அவுட்டாக்குன ஸ்டார்க் டெக்னிக் ரொம்ப ஈஸி.. அவரின் மனைவி கிண்டல் பேட்டி

Alyssa Healy
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையின் நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் சுமாராக பேட்டிங் செய்தது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் அவர்களை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்ததாக செய்திகள் வந்தன.

அதற்கு முன்பாக அவர்களாகவே இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற்றது பல இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. முன்னதாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி கடைசியாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதில் முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஈஸியான டெக்னிக்:

ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் பந்துகளில் கவர் டிரைவ் அடிக்க முயற்சித்த விராட் கோலி தம்முடைய விக்கெட்டை இழந்து இந்தியாவின் வெற்றியைத் தாரை வார்த்தார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் மிகவும் எளிதாக விராட் கோலியை விக்கெட்டை எடுத்தார். இந்நிலையில் அத்தொடரில் விராட் கோலியை அவுட் சைட் ஆஃப் பந்துகள் டெக்னிக்கை பின்பற்றி எளிதாக அவுட்டாக்கியதாக அவருடைய மனைவி அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில் பந்து வீசினாலே விராட் கோலி தாமாக தம்முடைய விக்கெட்டை பரிசாக கொடுத்ததாகவும் அவர் கலாய்த்துள்ளார். இது பற்றி ஹீலி பேசியது பின்வருமாறு. “போதுமான அளவுக்கு சொல்வேன். அவருக்கு எதிராக பவுலிங் செய்வதை மிட்ச் மிகவும் விரும்பினார். ஏனெனில் அவர் அவுட் சைட் ஆஃப் பகுதியில் தொடர்ந்து பௌலிங் செய்ய விரும்பக் கூடியவர்”

- Advertisement -

கலாய்த்த ஹீலி:

“மறுபுறம் விராட் கோலி அந்தப் பந்துகளை தொட விரும்பக் கூடியவர். அதனாலேயே அதை நான் விரும்புகிறேன். அந்த பந்துகளில் விராட் கோலியிடம் டெக்னிக்கல் பிரச்சனை இருப்பதாக அனைவரும் சொன்னார்கள். ஆனால் தம்முடைய கேரியர் முழுவதும் விராட் கோலி அதே பந்துகளை அடித்து தான் ரன்கள் சேர்த்தார்”

இதையும் படிங்க: பும்ரா இல்லனா ஜடேஜாவை கேப்டனாக போடுங்க.. கில் முதல்ல அதை கத்துகிட்டும்.. அஸ்வின் பேட்டி

“நீங்கள் அந்தப் பந்துகளை ட்ரைவ் செய்வதற்கு தைரியம் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பந்துகள் உங்களைத் தொந்தரவு செய்யும். ஆனால் அதற்கு நீங்கள் கவுன்டர் அட்டாக் செய்து பதிலடி கொடுக்க வேண்டும். அதை நீங்கள் சரியாக செய்தால் பவுலரை திருப்பி அடிக்கலாம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இனிமேல் விராட் கோலி ஐபிஎல் மற்றும் இந்தியாவுக்காக ஒருநாள் தொடரில் மட்டுமே விளையாட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement