பணிச்சுமை மட்டுமல்ல.. கம்பீரை எதிர்ப்பதாலும் பும்ரா சந்தித்துள்ள சரிவு – விவரம் இதோ

Bumrah and Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு வெளியேறியதால் அடுத்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் யார்? என்கிற கேள்வியே கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வருகின்றன. ஏனெனில் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடராக நடைபெறவுள்ளது.

கம்பீரின் சொல்பேச்சை கேட்காத பும்ரா :

எனவே அந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கவும் 2007-க்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றாத இந்திய அணி அந்த சோகத்தை போக்கும் வகையிலும் இந்த தொடரில் வெற்றிக்கான முனைப்பு காட்டும் என்பதனால் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

- Advertisement -

ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இந்த நேரத்தில் அவர்களது இந்த ஓய்வு முடிவு இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கான போட்டியில் பும்ரா, பண்ட் , கில், கே.எல் ராகுல் ஆகியோர் இருக்கும் வேளையில் சுப்மன் கில் தான் அடுத்த டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

பும்ரா தற்போது டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்தாலும் அவர் நிரந்தர கேப்டனாக மாற மாட்டார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு அவருடைய பணிச்சுமை ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும் கெளதம் கம்பீரின் கட்டளையை கேட்காமல் நடந்து கொள்வதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வெளியான தகவலின் படி :

- Advertisement -

பும்ராவின் பணிச்சுமை காரணமாக ஒரு சில போட்டிகளில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்வார் என்பதனால் அவருக்கு கேப்டன் பதவி மறுக்கப்பட்டது உண்மைதான். அதேபோன்று கம்பீர் தற்போது இந்திய அணிக்குள் பெரிய அதிகாரத்தை கொண்டு வந்துள்ளதாக பேசப்பட்டு வரும் வேளையில் அவரின் பேச்சை கேட்டு நடக்கும் சுப்மன் கில்லையே அவர் கேப்டனாக நியமிக்கும்படி பிசிசிஐ-யிடம் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஜாஸ் பட்லர் விலகல்.. காரணம் என்ன? – மாற்றுவீரர் அறிவிப்பு

அதே வேளையில் கம்பீர் சொல்லும் பெரும்பாலான விடயங்களுக்கு மாற்றுக் கருத்தை கூறும் பும்ராவை அவருக்கு தனிப்பட்ட வகையில் பிடிக்காமல் போயுள்ளதாலும் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க கம்பீர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கம்பீரின் பேச்சுக்கு கட்டுப்படும் சுப்மன் கில்லே புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement