டெஸ்டில் ஓய்வு பெற்ற கிங் விராட் கோலிக்காக.. ஆர்சிபி ரசிகர்கள் கொடுக்கப் போகும் நெகிழ்ச்சி ஃபேர்வெல்

RCB Fans 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் ரோஹித் சர்மாவை விட மிகச்சிறந்த ஃபிட்னஸ் கொண்டுள்ள விராட் கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்தார்.

அதற்கடுத்த போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டுகளை இழந்த அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். மேலும் தற்போதைய ஐபிஎல் தொடரில் ரன்கள் குவித்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

விடைபெற்ற கிங்:

அப்படிப்பட்ட தரமான விராட் கோலி ஓரளவு நல்ல ஃபார்மில் இருப்பதால் இங்கிலாந்து தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஒன்றாக ஓய்வு பெற்றதைப் போலவே ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் விடை பெற்றுள்ளார். அவருக்கு ஏராளமானவர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தில் ஸ்பெஷல் ஃபேர்வெல் கொடுக்கத் தயாராகி வருகின்றனர். அதாவது இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் மீண்டும் மே 17ஆம் தேதி துவங்க உள்ளது. அதில் பெங்களூரு அணி மே 17ஆம் தேதி தங்களது சொந்த மண்ணில் கொல்கத்தாவை சந்திக்கிறது.

- Advertisement -

வெள்ளை ஜெர்ஸி:

அந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்து விடை பெற்றுள்ள விராட் கோலிக்கு அனைத்து ஆர்சிபி ரசிகர்களும் இந்திய டெஸ்ட் அணியின் வெள்ளை ஜெர்ஸியை அணிந்து வந்து ஃபேர்வெல் கொடுக்க முடிவெடுத்துள்ளனர். மேலும் இந்திய அணியின் டெஸ்ட் ஜெர்சி இல்லாதவர்கள் குறைந்தபட்சம் வெள்ளை சட்டையை அணிந்து வர வேண்டும் என்று ஆர்சிபி ரசிகர்கள் மற்ற ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இது பற்றி யாஸ்வி எனும் ஆர்சிபி ரசிகை பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஓய்வாக்கி இந்திய அணியில் ஓட்டையை போட்ட பிசிசிஐ.. ரோஹித், கோலிக்காக இதையாச்சும் செய்யனும்.. கும்ப்ளே சாடல்

“இந்தத் தலைமுறையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உயிர் கொடுத்த ஒருவருக்கு ஃபேர்வெல் செய்கிறோம். அதற்காக சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் அடுத்த ஆர்சிபி போட்டியில் அனைவரும் டெஸ்ட் வெள்ளை ஜெர்சியை அணிந்து வாருங்கள்” என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் அனைவரும் வெள்ளை ஜெர்ஸியை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

Advertisement