இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேளையில் கடைசியாக மார்ச் 8-ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற 58-வது லீக் போட்டியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் விளையாடியிருந்தன.
பஞ்சாப் – டெல்லி போட்டி மீண்டும் நடைபெறுமா? :
அந்தப் போட்டியின் முதல் 10 ஓவர்கள் முடிவடைந்த வேளையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான போர் சூழல் காரணமாக போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு காரணங்களால் அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதோடு மட்டுமின்றி ஒரு வாரம் தற்காலிகமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என பிசிசிஐயும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஐபிஎல் தொடர் அடுத்த வாரம் வியாழன் அல்லது வெள்ளி ஆகிய கிழமையில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அப்படி மீண்டும் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் பாதியில் நிறுத்தப்பட்ட அந்த பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மீண்டும் துவங்குமா? அல்லது கைவிடப்படுமா? என்ற கேள்வி அதிகளவில் ரசிகர்கள் மத்தயில் இருந்து வருகிறது.
ஏனெனில் அந்த போட்டி இரு அணிகளுக்குமே அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான முக்கியமான போட்டியாக இருப்பதனால் அந்த போட்டியின் முடிவு கிடைத்தாக வேண்டும் என்று இரு அணிகளும் விரும்புகின்றன. இந்நிலையில் அந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் மீண்டும் ஐபிஎல் தொடரானது துவங்கும் போது பாதியில் நிறுத்தப்பட்ட அந்தப் போட்டி முதல் பந்தில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் உள்ளதால் அந்த போட்டியில் கிடைக்கும் முடிவு இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமானவை எனவே தான் அந்த போட்டி மீண்டும் முதல் பந்தில் இருந்து துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : 342 ரன்ஸ்.. 54 சிக்ஸ்.. முத்தரப்பு ஃபைனலில் இலங்கையை பந்தாடிய இந்தியா.. சதமடித்த மந்தனா வரலாற்று சாதனை
இதன் காரணமாக எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளி ஆகிய தினங்களில் ஐபிஎல் தொடரின் 58-வது போட்டி மீண்டும் துவங்கும் என்றும் அதற்கு அடுத்து எஞ்சியுள்ள 16 ஆட்டங்கள் விரைவாக நடத்தப்பட்டு இந்த மாதத்திற்குள் ஐபிஎல் போட்டி முடிவடையும் என்றும் கூறப்பட்டுவது குறிப்பிடத்தக்கது.



