ரோஹித் திடீர்னு ரிட்டையராக இதான் காரணம்.. ஹிட்மேனை எல்லாரும் மிஸ் பண்ணுவோம்.. சேவாக் பேட்டி

Virender Sehwag
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் போட்டியில் சதத்தை அடித்து அசத்தினார். ஆனால் அதன் பின் தடுமாறிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அவர் 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்தார்.

அதன் காரணமாக 2019ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற ரோஹித் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் கேப்டனாகவும் முன்னேறிய அவரது தலைமையில் இந்தியா ஓரளவு நல்ல வெற்றிகளைப் பெற்றது. இருப்பினும் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

திடீர் ஓய்வு:

அந்தத் தோல்விகளுக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்பட்ட ரோஹித் முக்கிய காரணமாக அமைந்தார். அதனாலேயே ஆஸ்திரேலிய தொடரின் கடைசிப் போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டனாக ரோஹித் மோசமான சாதனை படைத்தார். இந்நிலையில் சுமாரான ஃபார்மில் ரோஹித்தை அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிசிசிஐ கழற்றி விட விரும்பியதாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன் ரோஹித் சர்மா மரியாதையுடன் ஓய்வு பெற்றதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சமீபத்தில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் அல்லது ஆஸ்திரேலியாவின் சிட்னி டெஸ்ட் தமது கடைசி போட்டி கிடையாது என்று ரோஹித் சொன்னதை நானும் கேட்டேன். மேலும் தொடர்ந்து விளையாட விரும்பும் நான் தற்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை என்று ரோஹித் கூறினார்”

- Advertisement -

தரமான ஹிட்மேன்:

“ஆனால் அதற்கிடைப்பட்ட சமயத்தில் என்ன நடந்திருக்கும்? அனேகமாக ரோஹித் சர்மாவை நாங்கள் டெஸ்ட் கேப்டனாக தேர்ந்தெடுக்க மாட்டோம் அல்லது இங்கிலாந்து தொடருக்கு ஒரு வீரராக கூட தேர்ந்தெடுக்க மாட்டோம் என்ற முடிவை தேர்வாளர்கள் எடுத்திருக்கலாம். அது பற்றி ரோகித்திடம் அவர்கள் பேசி சில ஆப்ஷன்களை வழங்கியிருப்பார்கள்”

இதையும் படிங்க: 2013இல் என்கிட்ட தொப்பியை வாங்கிய ரோஹித்.. அந்த சாதனையுடன் ரிட்டையானதற்கு வாழ்த்துக்கள்.. சச்சின் பாராட்டு

“அதில் தாம் விரும்பிய ஆப்சன்கள் இல்லாத காரணத்தாலேயே இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன் அல்லது பிசிசிஐ வேறு முடிவு எடுக்கப்படுவதற்கு முன் ரோஹித் ஓய்வை அறிவித்தார். அது நல்ல அறிகுறி. ரோஹித் போன்ற வீரரை யார் தான் மிஸ் செய்ய மாட்டார்கள்? அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ரசிகர்கள் அவருடைய பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். அவர் உருவாக்கியுள்ள ரெக்கார்டுகள் அபாரமானது. ஆம் அவர் இன்னும் கொஞ்சம் விளையாடி 100 டெஸ்ட் போட்டிகள் வரை தொடர்ந்திருக்கலாம். சிலர் மட்டுமே அந்த சாதனையைப் படைத்துள்ளனர். எப்படியானாலும் அற்புதமான கேரியரைக் கொண்ட ரோஹித் எடுத்த முடிவு சரியானது” என்று கூறியுள்ளார்

Advertisement