ஒரே போட்டியில் ஃபினிஷராக 100, கீப்பராக 200.. ஐபிஎல் தொடரில் தல தோனி படைத்த 2 சரித்திர சாதனை

MS Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி கொல்கத்தாவில் 57வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை போராடி தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரகானே 48, மணிஷ் பாண்டே 36*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர்.

சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய சென்னைக்கு உர்வில் படேல் அதிரடியாக விளையாடி 31 (11) ரன்கள் விளாசினார். ஆனால் ஆயுஷ் மாத்ரே 0, கான்வே 0, அஸ்வின் 8, ஜடேஜா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 60/5 என சரிந்த சிஎஸ்கே மீண்டும் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

கீப்பராக 200:

இருப்பினும் அப்போது ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்து மொத்தம் 52 (25) ரன்கள் குவித்த தேவால்ட் பிரேவிஸ் போட்டியை தலைகீழாக மாற்றினார். அவருடன் சேர்ந்து விளையாடிய துபே 45 (40) ரன்கள் குவித்தார். இறுதியில் தோனி 14*, கம்போஜ் 4* ரன்கள் எடுத்ததால் கடைசி ஓவரில் இலக்கைத் தொட்ட சென்னை தங்களது 3வது வெற்றியைப் பெற்றது.

மறுபுறம் வைபவ் அரோரோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தும் போராடித் தோற்ற கொல்கத்தா பிளே ஆஃப் வாய்ப்பை 90% இழந்தது. முன்னதாக அப்போட்டியில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனி விக்கெட் கீப்பிங்கில் நூர் அஹ்மத் சுழலில் சுனில் நரைனை அபாரமாக ஸ்டம்பிங் செய்தார். மேலும் நூர் அஹ்மத் சுழலில் ரகுவன்சி கொடுத்த கேட்ச்சையும் தோனி அபாரமாக பிடித்து அசத்தினார்.

- Advertisement -

ஃபினிஷராக 200:

அதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் தோனி 153 கேட்ச்சுகள் பிடித்துள்ளார். அத்துடன் 47 ஸ்டம்பிங் செய்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை (153+47) எடுக்க உதவியை முதல் விக்கெட் கீப்பர் என்ற சரித்திர சாதனையை தோனி படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் 174 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: பர்ப்புள் கேப் முக்கியமில்ல.. என்னை பொறுத்தவரை இதுதான் முக்கியம் – ஆட்டநாயகன் நூர் அகமது பேட்டி

மேலும் பேட்டிங்கில் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த தோனி 14* ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்து போட்டியை ஃபினிஷிங் செய்தார். இதையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 100* முறை நாட் அவுட்டாக களத்தில் இருந்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனையையும் தோனி படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. எம்எஸ் தோனி: 100*
2. ரவீந்திர ஜடேஜா: 80
3. கைரன் பொல்லார்ட்: 52
4. தினேஷ் கார்த்திக்: 50
5. டேவிட் மில்லர்: 49

Advertisement