பயிற்சி எடுக்காத தோனி காயமா? கொல்கத்தா போட்டியில் விளையாடுவாரா? கோச் சிம்மன்ஸ் பேட்டி

Eric Simmons
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளால் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள சென்னை இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக பேட்டிங்கில் அதிரடி காட்ட முடியாமல் திண்டாடியது. அதனால் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 9 தோல்விகளைச் சந்தித்துள்ள சென்னை பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

அத்துடன் முதல் முறையாக அடுத்தடுத்த வருடங்களில் (2024, 2025) பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் சிஎஸ்கே மோசமான சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்காக சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. அதில் ஆயுஸ் மாத்ரே, தேவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் அசத்தியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது.

- Advertisement -

தோனி காயமா:

இதைத் தொடர்ந்து சென்னை தங்களது அடுத்த போட்டியில் மே 7ஆம் தேதி கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. அந்தப் போட்டிக்காக வழக்கம் போல இரு அணி வீரர்களும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பயிற்சிகளை எடுத்தார்கள். ஆனால் அந்த வலைப் பயிற்சியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பங்கேற்கவில்லை.

அதனால் தோனி காயமடைந்து விட்டாரா? கொல்கத்தா போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி காணப்படுகிறது. இந்நிலையில் தோனிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிர்சியாளர் எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது”

- Advertisement -

பயிற்சியாளர் பதில்:

“தோனியை பொறுத்த வரை தற்போதைய சூழ்நிலைகளைப் பற்றி அவர் நன்றாக அறிவார். எங்கே இருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். தயாராகும் முறைகளைப் பொறுத்த வரை இத்தொடரின் துவக்கத்திலேயே அவர் மிகவும் கடினமாகப் பயிற்சிகளை எடுத்தார். அதனால் தயாராக இருக்கிறோமா இல்லையா என்பது அவருக்குத் தெரியும்”

இதையும் படிங்க: பாண்டியாவுடன் மொத்த மும்பைக்கும்.. குஜராத் கோச்.. நெஹ்ராவுக்கும் 2 தண்டனை விதித்த பிசிசிஐ.. காரணம் என்ன?

“அதன் காரணமாக எந்த பிரச்சனையும் இல்லை. அவர் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்” என்று கூறினார். இதை அடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல சென்னையை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா எதிர்கொள்ள உள்ளது. மறுபுறம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் சிஎஸ்கே ஆறுதல் வெற்றியைப் பெற்று 7, 8 போன்ற கௌரவமான இடங்களை பிடிக்க முயற்சிக்க உள்ளது.

Advertisement