தோனிக்காக 4 கோடி ரூல்ஸை மாற்றியது.. இந்திய கிரிக்கெட்டை சீரழிக்கும்.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

Sunil Gavaskar
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளால் முதல் அணியாக வெளியேறியது. இந்த வருடம் 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 9 தோல்வி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக காயமடைந்த ருதுராஜ்க்கு பதிலாக மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தலைமையிலும் சென்னை அணி எந்த மாற்றத்தையும் சந்திக்காமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது.

முன்னதாக இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளை கேப்டனாக வென்ற தோனி ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அப்படிப்பட்ட அவர் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால் அவருடைய ஆட்டத்தைப் பார்க்க இப்போதும் ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

- Advertisement -

தோனிக்காக மாற்றலாமா:

தற்போது 43 வயதாகும் அவருக்கு 15 கோடி போன்ற பெரிய சம்பளத்தைக் கொடுத்தால் மற்ற வீரர்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் சென்னை அணியின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ 2018க்கு முன்பு வரை இருந்த அன்கேப்ட் வீரர் விதிமுறையை தோனிக்காக மீண்டும் கொண்டு வந்தது. அதன் படி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 5 வருடங்கள் நிறைவுற்ற தோனியை வெறும் 4 கோடி என்ற குறைந்த தொகைக்கு சிஎஸ்கே தக்க வைத்தது.

இந்நிலையில் தோனிக்காக அன்கேப்ட் வீரர் விதிமுறையை பிசிசிஐ மாற்றியது இந்திய கிரிக்கெட்டை சீரழிக்கும் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே பிசிசிஐ அதை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இளம் இந்திய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமலேயே பெரிய தொகைக்கு வாங்கப்பட்டால் அவர்களது வெற்றிக்கானப் பசி மற்றும் உந்துதல் தணிந்து மங்கி விடுவார்கள்”

- Advertisement -

கவாஸ்கர் கோரிக்கை:

“ஐபிஎல் அணிகளை பொறுத்த வரை அது பொருட்டல்ல. ஏனெனில் அதை அவர்கள் நல்ல ஆட்டம் என்று உணரலாம். ஆனால் இளம் வயதிலேயே பெரியத் தொகைக்கு வாங்கப்படும் இந்திய வீரர்கள் வெற்றி பெறாவிட்டால் அது இந்திய கிரிக்கெட்டை கொஞ்சம் தோற்கடிக்கும். மகேந்திர சிங் தோனிக்கு இடம் அளிப்பதற்காக கடந்த ஏலத்திற்கு முன் வரம்பு 4 கோடியாக உயர்த்தப்பட்டது”

இதையும் படிங்க: மறுபடியும் ஐ.பி.எல் வாய்ப்பு கிடைச்சா சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டேன்.. என் சாய்ஸ் அந்த டீம் தான் – சுரேஷ் ரெய்னா

“கடந்தக் காலங்களில் அன்கேப்ட் பிறர் பெரியத் தொகைக்கு வாங்கப்பட்டு தன்னுடைய திறமையை நிரூபித்ததாக எனக்கு நினைவில்லை. ஒருவேளை அடுத்த சில வருடங்களில் அது மாறலாம். இருப்பினும் அது போன்ற வீரர்களின் சம்பளம் அடுத்த ஏலத்தில் குறைந்தால் அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் மற்றும் அழுத்தத்தை குறைக்கும். அது அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவதற்கு உதவும்” என்று கூறினார்.

Advertisement