நான் இன்னைக்கு பெரிய பிளேயரா இருக்க காரணமே அவர்தான்.. எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் அவர்தான் – மனதிறந்த கோலி

Kohli
- Advertisement -

ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்து வருகிறார். இதுவரை இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 அரைசதம் உட்பட 443 ரன்களை அடித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் அவர்தான் : விராட் கோலி

இந்த ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் லீக் போட்டிகளில் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ள வேளையில் அதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு நுழைவது உறுதி.

- Advertisement -

இந்நிலையில் ஆர்.சி.பி அணியின் ஏற்பாட்டின்படி பிரத்யேக நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி தனது கரியர் குறித்த பல்வேறு சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார். அதில் இந்த அளவுக்கு தான் கிரிக்கெட்டில் முன்னேறி வர தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் யார்? என்பது குறித்து சில தகவல்களையும் விராட் கோலி பகிர்ந்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும் மார்க் பவுச்சர் தான் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஏனெனில் எனது பலவீனங்கள் ஆரம்ப கட்டத்தில் என்னவாக இருக்கும்? என்பதை அவர் தான் கண்டுபிடித்தார். அதுமட்டும் இன்றி அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவையும் எனக்கு உண்டாக்கினார்.

- Advertisement -

ஒருமுறை அவர் என்னிடம் வந்து இந்தியாவுக்காக நீ பல ஆண்டுகாலம் விளையாடுவதை நான் பார்க்கவில்லை என்றால் அது உன்னுடைய தவறு தான். நீ ஒரு மிகச்சிறந்த வீரர் என்று கூறியிருந்தார். அவர்கூறிய அந்த வார்த்தை எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. இன்று நான் பெரிய வீரராக இருப்பதற்கு அதுபோன்ற சில வார்த்தைகளும் காரணம் என நினைக்கிறேன்.

இதையும் படிங்க : குஜராத் அணியிடம் நாங்க சந்திச்ச இந்த மோசமான தோல்விக்கு 2 காரணம் இருக்கு – பேட் கம்மின்ஸ் வருத்தம்

அதே போன்று ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பை தவிர பெரிய பதக்கமோ, கோப்பையோ எனக்கு பெரிதல்ல. இத்தனை ஆண்டுகளில் எந்த விதத்திலும் ரசிகர்களின் அன்பு கொஞ்சம் கூட மாறவில்லை என்பதை என்னால் இப்போதும் உணர முடியாது என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement