ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் 47வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அப்போட்டியில் குஜராத் நிர்ணயித்த 210 ரன்களை வெறும் 15.5 ஓவரில் தொட்ட ராஜஸ்தான் அபாரமான வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு வெறும் 14 வயது நிரம்பிய இளம் வீரர் வைபவ் சூரியவன்சி 7 பவுண்டரி 11 சிக்ஸருடன் 101 (38) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இளம் வயதில் டி20 சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். அது போக ஐபிஎல் தொடரில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் உட்பட நிறைய சாதனைகளை சூரியவன்சி படைத்துள்ளார்.
கிரேட் சதம்:
முன்னதாக அந்தப் போட்டியில் முகமது சிராஜ் சாய், கிஷோர் உள்ளிட்ட தரமான பவுலர்களை சூர்யவன்சி அடித்து நொறுக்கி பட்டாசாக விளையாடினார். குறிப்பாக 94 ரன்னில் இருந்த போது உலகின் நம்பர் ஒன் டி20 பௌலராக அறியப்படும் ரசித் கானுக்கு எதிராக சிக்ஸரை பறக்க விட்ட அவர் உலக சாதனை சதத்தை பயமின்றி தொட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் வைபவ் ஐபிஎல் வரலாற்றின் கிரேட் சதத்தை அடித்துள்ளதாக என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஷான் பொல்லாக் பாராட்டுயுள்ளார். ஏனெனில் தாம் திறப்பதற்கு முன்பாக பிறந்து குறைந்தது 4 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய ரசித் கான் உள்ளிட்ட தரமான குஜராத் பவுலர்களை வைபவ் அடித்து நொறுக்கியதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி பொல்லாக் பேசியது பின்வருமாறு.
பொல்லாக் பாராட்டு:
“என்னைப் பொறுத்த வரை இது ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தப்பட்ட கிரேட் தனிநபர் செயல்பாடாகும். ஏனெனில் 14 வயது நிரம்பிய பையன் களத்திற்கு வந்து அனைத்து திசைகளிலும் அடித்து வெறும் 35 பந்தில் சதத்தை தொட்டார். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வெற்றிகள் மற்றும் செயல்பாடுகள் இருந்துள்ளன. ஆனால் இது ஐபிஎல் வரலாற்றின் கிரேட்டஸ்ட் செயல்பாடாகும்”
இதையும் படிங்க: 2008-ல் டெல்லி அணியால் விராட் கோலி தேர்வு செய்யப்படாதது ஏன்? – வீரேந்தர் சேவாக் கொடுத்த விளக்கம்
“இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு பள்ளியில் உடல்ரீதியாக கொடுக்கப்படும் தண்டனைகள் முடிந்து போயுள்ளது. ஆனால் இந்தப் பையன் பள்ளியிலிருந்து வந்து களத்தில் எதிரணிக்கு சீரியஸான தண்டனைக் கொடுத்துள்ளார். எதிரணியில் இருந்த சில வீரர்கள் அவர் பிறப்பதற்கு முன்பாகவே 4 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட அவர்களை இந்தப் பையன் அடித்து நொறுக்கினார்” என்று கூறினார்.



