இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு காரணம் இதுதான் : ரஜத் பட்டிதார்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 41 ரன்களையும், ஸ்டப்ஸ் 34 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது டெல்லி அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 165 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக க்ருனால் பாண்டியா 73 ரன்களையும், விராட் கோலி 51 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் : உண்மையிலேயே இது ஒரு முழுமையான அணியின் வெற்றியாக அமைந்தது. எங்களது பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பாக தங்களது திட்டத்தின் படி பந்துவீசி இருந்தனர்.
நான் ஏற்கனவே கூறியது போல எந்த மைதானத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியம் கிடையாது. அந்த போட்டியில் பெறப்போகும் வெற்றி தான் முக்கியம். இந்த போட்டியில் நாங்கள் சேசிங் செய்யும் போது எங்களுக்கு மைதானத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. அதனால் மிகச்சிறப்பாக டார்கெட்டை எதிர்கொண்டோம்.
இதையும் படிங்க : 26/3ன்னு ஆர்சிபி விழுந்தப்போ.. இந்த திட்டத்தை வெச்சு தான் ஜெய்க்க வெச்சேன்.. கிங் கோலி பேட்டி
இந்த போட்டியில் பவுலர்கள் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்த சிறிய மைதானத்தில் இவ்வளவு குறைந்த இலக்கில் எதிரணியை நிறுத்தியதால் எளிதாக இலக்கை நோக்கி செல்ல முடிந்தது. ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கேப்டனாக இருப்பது எனக்கு நல்ல அனுபவத்தையும் தருகிறது என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.



