இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
சாதனையை தக்கவைத்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை அடித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்களையும், ரயான் ரிக்கல்டன் 41 ரன்களையும் குவித்து அசத்தினர்.
டெல்லி அணி சார்பாக விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அதனை தொடர்ந்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது .டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கருண் நாயர் 89 ரன்களையும், அபிஷேக் போரல் 33 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்த போட்டியின் போது வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியல் தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மும்பை அணி தங்களது வரலாற்று சாதனை தாங்களே தக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க : 119/1 டூ 193க்கு அவுட்.. எல்லா நாளும் அவங்க காப்பாத்த மாட்டாங்க.. பையிலிருந்த வெற்றி பறிபோக இதான் காரணம்.. அக்சர் பேட்டி
அதாவது மும்பை அணி இதுவரை 200 ரன்களுக்கு மேல் அடித்த ஒரு போட்டியில் கூட தோற்றதே இல்லை என்ற சாதனையை தக்க வைத்துள்ளது. மும்பை அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்து 20 ரன்களுக்கு மேல் குவித்த 15 போட்டிகளிலும் அந்த அணி எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



