அஸ்வினை பெஞ்சில் வெச்சா தான் இதை செய்வாரு.. நினைச்சதுக்கு எதிரா சிஎஸ்கே மாறிடுச்சு.. ஸ்ரீகாந்த் விளாசல்

K Srikkanth
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் திணறி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளில் 5 தொடர் தோல்விகளை சந்தித்தது. அத்துடன் தங்களுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி 3 தொடர்ச்சியானப் போட்டிகளில் தோற்றுள்ளது.

இந்தத் தோல்விக்கு பவர்பிளே பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் தோனி அதிரடியாக விளையாடவில்லை என்பதும் தோல்விக்குக் காரணமாக அமைவதாக எதிரணி ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் அஸ்வின் 10 வருடங்கள் கழித்து சிஎஸ்கே அணிக்கு இந்த வருடம் விளையாட வந்ததால் வெற்றி நடை போடும் என்று எதிர்பார்த்ததாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

- Advertisement -

அஸ்வினை தூக்குங்க:

ஏனெனில் அஸ்வின், நூர் அஹ்மத், ஜடேஜா ஆகியோர் சேப்பாக்கத்தில் எதிரணிகளை தெறிக்க விடுவார்கள் என்று நம்பியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் 9.70 கோடிக்கு வாங்கப்பட்ட அஸ்வின் மிகவும் மோசமாக பௌலிங் செய்வது தோல்விக்கு காரணமாக அமைவதாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். எனவே அஸ்வினை சில போட்டிகள் பெஞ்சில் அமர வைத்தால் தான் கம்பேக் கொடுப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்ரீகாந்த் தம்முடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நம்மிடம் துப்பாக்கியை போன்ற பவுலிங் வரிசை இருப்பதாக நினைத்தேன். அதனால் சிஎஸ்கே அணி சென்னையில் 3 உலகத் தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை வைத்து எதிரணிகளுக்கு நிலைமையை கடினமாக மாற்றும் என்று நினைத்தேன்”

- Advertisement -

ஸ்ரீகாந்த் விமர்சனம்:

“சிஎஸ்கே அணி 180 ரன்கள் அடித்த பின் வெற்றி பெறுவதற்கு தங்களுடைய பவுலிங் அட்டாக்கை சார்ந்து இருக்கும் என்று நாம் அனைவரும் நம்பினோம். ஆனால் அந்தத் திட்டம் அனைத்தும் அப்படியே தெற்கே சென்றுள்ளது. அஸ்வின் மிக மிக மோசமாக பௌலிங் செய்கிறார். இப்படி பவுலிங் செய்த பின்பும் அடுத்தப் போட்டியில் அவர் அணியில் இருப்பாரா என்பது கேள்விக்குறியாகும்”

இதையும் படிங்க: இந்த காரணத்தால் ஜோப்ரா ஆர்ச்சர் எனக்கு தூசி மாதிரி.. ராஜஸ்தானை சாய்த்த ஆட்டநாயகன் சால்ட் பேட்டி

“என்னைக் கேட்டால் அவரை நான் அணியிலிருந்து நீக்க சொல்வேன். எப்போதும் அஸ்வினுக்கு ஆதரவு கொடுக்கும் நான் இப்போது நீக்கச் சொல்கிறேன். சில போட்டிகள் விளையாடாமல் இருந்தால் தான் அவர் தன்னுடைய இடத்தின் அருமையை உணர்வார். அப்போது தான் அவரும் வலுவான கம்பேக் கொடுப்பார். ஜடேஜா ஃபார்மில் இல்லை. அஸ்வின் மோசமாக பவுலிங் செய்வதால் அவரை நீக்க விரும்புகிறேன். அடுத்தப் போட்டியில் லக்னோ அணியில் சில இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் சிஎஸ்கே அவரை தைரியமாக நீக்குவார்களா என்பது தெரியாது” எனக் கூறினார்

Advertisement