சி.எஸ்.கே அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்து அசத்திய சன் ரைசர்ஸ் – விவரம் இதோ

SRH
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

சி.எஸ்.கே அணியின் சாதனையை சமன் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் :

அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களையும் குவித்து அசித்தினர்.

- Advertisement -

பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 247 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மாபெரும் இலக்கினை வெகு எளிதாக சேசிங் செய்த சன்ரைசர்ஸ் அணியானது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வெற்றிகரமான சேசிங்கை பதிவு செய்ததோடு இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பெற்றிருந்தது. நேற்று சன்ரைசர்ஸ் பெற்ற இந்த வெற்றியின் மூலம் ஜாம்பவான் அணியான சி.எஸ்.கே அணியின் வரலாற்று சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக சென்னை அணி முதலிடத்தில் இருந்தது. சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக எட்டு முறை வெற்றி பெற்றிருந்தது.

இதையும் படிங்க : நான் 141 ரன்ஸ் அடிச்சது நிச்சயமா எங்க அப்பாவுக்கு பத்தாது.. சாதனை சதத்திற்கு பிறகு – அபிஷேக் சர்மா ஓபன்டாக்

இந்நிலையில் அந்த சாதனையை தற்போது சன்ரைசர்ஸ் அணி சமன் செய்துள்ளது. அதாவது சன் ரைசர்ஸ் அணியானது ஹைதராபாத் மைதானத்தில் தொடர்ச்சியாக பஞ்சாப் அணியை எட்டாவது முறையாக நேற்று வீழ்த்தி அந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement