ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 27வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 246 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82, பிரியான்ஸ் ஆர்யா 36, ஸ்டோய்னிஸ் 34* ரன்கள் அடித்தார்கள். பின்னர் விளையாடியாக ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் 247-2 ரன்கள் எடுத்து எங்களது சொந்த ஊரில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தது.
அந்த அணிக்கு துவக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா 141 – டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் அடித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அதனால் ஐபிஎல் தொடரில் 2வது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த ஹைதராபாத் நடப்பு சீசனில் தங்களது 2வது வெற்றியையும் பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அபிஷேக் சாதனைகள்:
இந்தப் போட்டியில் அவர் படைத்த சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.
1. ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிகபட்ச ஸ்கோர் (141) அடித்த வீரர் என்ற சரித்திர சாதனையை அபிஷேக் படித்துள்ளார். இதற்கு முன் கடந்த வருடம் சென்னைக்கு எதிராக லக்னோவின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 124* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
2. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் (141) பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் படைத்துள்ளார். இது போக டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அபிஷேக் படைத்துள்ளார். இதற்கு முன் கேஎல் ராகுல் 132* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. ஒட்டுமொத்தமாக கிறிஸ் கெயில் (175*), ப்ரெண்டன் மெக்கல்லம் (158*) ஆகியோருக்கு பின் 3வது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் படைத்த வீரராகவும் அபிஷேக் சாதித்துள்ளார்.
20 பந்துக்குள் 3 அரை சதம்:
3. இந்தப் போட்டியில் அபிஷேக் ஷர்மா 19 பந்துகளில் 50 ரன்கள் அடித்துள்ளார். இதையும் சேர்த்து 3 முறை அவர் 20 பந்துகளுக்குள் அரை சதத்தை அடித்துள்ளார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 20 பந்துகளுக்குள் 3 அரை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சரவெடி சாதனையையும் அபிஷேக் படித்துள்ளார். அவரைத் தவிர்த்து வேறு எந்த இந்திய வீரர்களும் இந்த சாதனையை செய்ததில்லை.
இதையும் படிங்க: இதுமட்டும் நடந்தா போதும்.. ரோஹித் சர்மா செஞ்சுரி அடிக்கப்போவது உறுதி – மைக்கல் கிளார்க் பேட்டி
4. 40 பந்தில் 100 ரன்கள் தொட்ட அபிஷேக் ஐபிஎல் தொடரில் 4வது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரில் யூசுப் பதான் (37), பிரியான்ஸ் ஆர்யா (39) ஆகியோருக்கு பின் 3வது வேகமான சதத்தை அடித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார். மேலும் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் (10) அடித்த ஹைதராபாத் வீரராகவும் அபிஷேக் சாதனை படைத்துள்ளார்.



