ஆர்சிபியை விட எனக்கு தான் இது நல்லா தெரியும்.. கீப்பரா இருப்பதால் ஈஸியா ஜெயிக்க வெச்சுட்டேன்.. ராகுல் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற்ற 24வது போட்டியில் பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 20 ஓவரில் 163-7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப் சால்ட் 37, டிம் டேவிட் 37*, கேப்டன் படிதார் 25 ரன்கள் எடுத்தார்கள்.

டெல்லிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகாம் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய டெல்லிக்கு டு பிளேஸிஸ் 2, ஜேக் பிரேசர் 7, அபிஷேக் போரல் 7, கேப்டன் அக்சர் படேல் 15 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 58-4 என என தடுமாறிய டெல்லிக்கு நான்காவது இடத்தில் விளையாடிய ராகுல் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

ஆட்டநாயகன் ராகுல்:

அவருக்கு திரிஷ்டன் 38* (23) ரன்கள் விளாசி கைக் கொடுத்தார். அதைப் பயன்படுத்திய ராகுல் 93* (53) ரன்கள் விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்ததால் 17.5 ஓவரில் 169-4 ரன்களை எடுத்த டெல்லி தங்களுடைய 4வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. அதனால் பெங்களூருவுக்கு புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கர்நாடகாவில் பிறந்து சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட்டை விளையாடிப் பழகிய தமக்கு ஆர்சிபி அணியை விட அங்குள்ள சூழ்நிலை நன்றாக தெரியும் என்று ராகுல் கூறியுள்ளார். அதைப் பயன்படுத்தி இப்போட்டியில் அவர் டெல்லியை வெற்றி பெற வைத்தது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

என் ஊர் பெங்களூரு:

“பிட்ச் கொஞ்சம் ட்ரிக்காக இருந்தது. அதில் 20 ஓவர்கள் விக்கெட் கீப்பராக செயல்பட்டது பிட்ச் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க உதவியது. விக்கெட் கீப்பிங் செய்வதால் என்னால் பந்து எப்படி வருகிறது என்பது போன்ற விஷயங்களை கண்டறிய முடிகிறது. அது தொடர்ச்சியாக இருதலைபட்ச வேகத்தில் இருந்தது. அங்கே எனது ஷாட்டுகள் பற்றி எனக்கு தெரியும்”

இதையும் படிங்க: 30/3 டூ 169/4.. டெல்லியை தூக்கி வெற்றி பெற வைத்த ராகுல்.. சொந்த மண்ணில் ஆர்சிபி மோசமான சாதனை

“அதைப் பின்பற்றி அசத்த எனக்கு நல்லத் துவக்கம் மட்டுமே தேவை. ஆரம்பத்திலேயே அதிரடியாக துவங்கி அங்கிருந்து அசத்துவது முக்கியம். ஒருவேளை நான் சிக்ஸர் அடிக்க முயற்சித்தால் அதை எங்கு அடிக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். விக்கெட் கீப்பராக இருப்பது எப்படி மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடுகிறார்கள், அவர்கள் எப்படி விக்கெட்டை இழக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அதிர்ஷ்டவசமாக எனது கேட்ச்சை தவற விட்டார்கள். இது என்னுடைய வீடு. என்னுடைய மைதானம். அது மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு நன்றாக தெரியும். அங்கே மகிழ்ச்சியுடன் விளையாடினேன்” என்று கூறினார்.

Advertisement