12 ரன்ஸ்.. சிஎஸ்கே போலவே மும்பையை கோட்டையில் சாய்த்த ஆர்சிபி.. 10 வருடம் கழித்து சாதனை வெற்றி

- Advertisement -

ஐபிஎல் 2025 ஏப்ரல் 7ஆம் தேதி மும்பையில் 20வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பெங்களூருவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 221-5 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக விராட் கோலி 67, கேப்டன் ரஜத் படிதார் 64, ஜிதேஷ் சர்மா 40* தேவ்தூத் படிக்கல் 37 ரன்கள் எடுத்தனர்.

மும்பைக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்டிக் பாண்டியா 2, ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக விளையாடிய மும்பைக்கு அதிரடி காட்ட முயற்சித்த ரோஹித் சர்மா 17 (9), ரியான் ரிக்கல்டன் 17 (10) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸ் 22 (18) ரன்னில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தார்.

- Advertisement -

போராடிய மும்பை:

பெரிதும் நம்பப்பட்ட சூரியகுமார் யாதவ் தடுமாற்றமாக விளையாடி 28 (26) ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் 99-4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பை அணிக்கு மிடில் ஆர்டரில் திலக் வர்மா – பாண்டியா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி வெற்றிக்குப் போராடினர். 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி மும்பையை வெற்றி பெற வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது திலக்கை 56 (29) ரன்னில் புவனேஸ்வர் குமார் காலி செய்தார். மறுபுறம் 42 (18) ரன்களை அடித்து நொறுக்கிய ஹர்திக் பாண்டியா முக்கிய நேரத்தில் ஜோஸ் ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த நமன் திர் 11, மிட்சேல் சான்ட்னர் 8 ரன்னில் அவுட்டாகி ஃபினிசிங் செய்யத் தவறினார்கள்.

- Advertisement -

பெங்களூரு சாதனை வெற்றி:

அதனால் 20 ஓவரில் கடுமையாக போராடியும் 209-9 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையும் சேர்த்து 4வது தோல்வியைப் பதிவு செய்த மும்பை பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. மறுபுறம் மும்பையை அதனுடைய சொந்த மண்ணில் 10 வருடங்கள் கழித்து தோற்கடித்து பெங்களூரு சாதனை வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ஆர்சிபி 221 ரன்ஸ்.. பும்ரா கம்பேக்.. சோயப் மாலிக்கை முந்திய கிங் கோலி.. ஆசிய நாயகனாக வரலாற்று சாதனை

அதிகபட்சமாக யாஷ் தயாள் 2, க்ருனால் பாண்டியா 2, ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். கடைசியாக 2015ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அந்த அணி தற்போது 10 வருடங்கள் கழித்து வான்கடே மைதானத்தில் வென்றது. சமீபத்தில் சென்னையை அதன் கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கத்தில் 17 வருடங்கள் கழித்து ஆர்சிபி தோற்கடித்தது. தற்போது மும்பையையும் தோற்கடித்துள்ளதால் இம்முறை கோப்பை வெல்வோம் என்ற கொண்டாட்டத்தில் ஆர்சிபி ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement