தோனி இல்ல.. சென்னை அணியின் மோசமான தோல்விகளுக்கு காரணம் இதுதான் – வாசிம் ஜாபர் கருத்து

Wasim Jaffer
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை அசத்தலாக துவங்கியது. ஆனால் அதற்கடுத்து நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்துள்ளது.

சி.எஸ்.கே அணியின் சரிவுக்கான காரணம் குறித்து பேசிய : வாசிம் ஜாபர்

இதன் காரணமாக முதல் நான்கு போட்டிகளின் முடிவில் மூன்று தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்துள்ளது. சென்னை அணி இப்படி ஒரு மோசமான துவக்கத்தை எதிர்கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு தோனி தான் காரணம் என்றும் அவர் பின் வரிசையில் மிக தாமதமாக களமிறங்குவதே காரணம் என்றும் அப்படி இறங்கினாலும் பேட்டிங்கில் பெரியளவு அதிரடி காட்டாததாலே சென்னை அணி தோல்விகளை சந்தித்து வருவதாகவும் ஒரு விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது.

ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தோல்வியை சந்திக்க தோனி காரணம் இல்லை என்றும் சென்னை அணியின் முழு பேட்டிங் ஆர்டர் தான் காரணம் என்றும் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சென்னை அணி இந்த ஆண்டு மோசமான சரிவினை சந்தித்ததற்கு காரணமே அவர்கள் பேட்டியின்போது அதிகளவு விக்கெட்டுகளை விரைவாக விட்டுக்கொடுக்கிறார்கள்.

- Advertisement -

எந்த பேட்ஸ்மேனும் சரியான ஷாட் செலக்ஷனில் ஈடுபடுவதில்லை. அதோடு அணி தேர்வுமே சென்னை அணிக்கு சரியாக இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் வீரர்கள் தங்களது இடம் பறிபோகி விடுமோ என்ற பயத்தில் விளையாடுவது போன்று எனக்கு தெரிகிறது. வழக்கமாகவே சென்னை அணி நிலையான வீரர்களைக் கொண்டு விளையாடும் அணி. ஆனால் இம்முறை அதிக மாற்றங்களை செய்து வருகிறது.

இதையும் படிங்க : நடப்பு 2025 ஐ.பி.எல் சீசனில் முதல் நபராக மோசமான சாதனையை நிகழ்த்திய விஜய் சங்கர் – விவரம் இதோ

இதன் காரணமாகவும் சென்னை அணி சிக்கலை சந்தித்து வருகிறது. அதோடு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே அவர்களது தொடர் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. எந்த வீரர்களுமே பெரிய அளவில் பாட்னர்ஷிப் அமைக்காததே சென்னையின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement