விராட் கோலிக்கு பந்துவீசும் முன் கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. அரங்கேறிய எமோஷனல் மொமென்ட் – என்ன நடந்தது?

Siraj and Kohli
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற பெங்களூரு அணி ஹோம் கிரவுண்டுக்கு வந்தவுடன் முதல் சறுக்களை சந்தித்துள்ளது.

விராட் கோலியை பார்த்து கண் கலங்கிய முகமது சிராஜ் :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவிக்க பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 170 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதன்காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. குறிப்பாக பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரது விக்கெட்டை சிராஜ் கைப்பற்றி இருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் ஓவரை வீச வந்த முகமது சிராஜ் விராட் கோலிக்கு எதிராக பந்துவீச முடியாமல் கண்கலங்கி நின்ற எமோஷனலான தருணம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த வகையில் முதல் ஓவரின் போது நடந்தது யாதெனில் : இந்த போட்டியின் முதல் பந்தை பிலிப் சால்ட்க்கு எதிராக வீசிய அவர் இரண்டாவது பந்தை விராட் கோலிக்கு எதிராக வீச தயாரானார்.

- Advertisement -

பின்னர் இரண்டாவது பந்தை வீச ஓடி வந்த அவர் கிரீஸில் பேட்டுடன் நின்ற விராட் கோலியை பார்த்து அவருக்கு எதிராக பந்துவீச முடியாமல் ஒரு கணம் கண்ணீர் ததும்ப அந்த பந்தை வீச முடியாமல் அவரிடம் மன்னிப்பு கேட்டு பின்னால் சென்று மீண்டும் பந்துவீச தயாரானார். அதனை கண்ட விராட் கோலியும் ஒரு நொடி சற்று எமோஷனலாக மாறினார். அதற்கு காரணம் யாதெனில் :

இதையும் படிங்க : ஆர்சிபி’க்கு இல்ல.. சிராஜ் பதிலடி கொடுத்ததே அவங்களுக்கு தான்.. கம்பேக் கொடுத்து காட்டுங்க.. சேவாக் பேட்டி

கடந்த ஏழு ஆண்டுகளாக தனது மூத்த சகோதரரை போன்றும், குருவை போன்றும் அருகில் இருந்து பார்த்து அவரது ஆதரவில் இருந்து வந்த சிராஜ் தற்போது விராட் கோலிக்கு எதிராகவே பந்துவீசும் நிலை வந்ததை எண்ணியே கண் கலங்கினார். கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் ஆர்.சி.பி அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்திருத்து குறிப்பிடத்தக்கது.

Advertisement